ஞாயிறு, 17 டிசம்பர், 2023

ரயில் தோட்டத்தில் பூத்த தமிழ் மலர்

என்னை விட வயதில் சுமார் 14 வருடங்கள் மூத்தவராக இருந்தாலும், எனக்கு மிகவும் நெருங்கிய நண்பர்.

கூடல் நகர் வளர்த்தது, தமிழ்ச் சங்கத்தை மட்டுமல்ல, இவரையும் சேர்த்துத் தான் என்பதாலோ என்னவோ, தமிழ் மீது அளவில்லாப் பற்று கொண்டவர்.

பட்டப் படிப்பு முதுகலை வேளாண்மை, கோவை தமிழ் நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில்.

அப்பல்கலைக்கழகத்தில் ஓராண்டு உதவிப் பேராசிரியராக பணி புரிந்த பின்னர்,  குடியுரிமைப் பணிகள் வாரியம் நடத்தும் தேர்வில் (UPSC -Civil Services Examination) 134 தர வரிசை பெற்றார். 

அதற்கு முக்கிய காரணமாக இருந்த நண்பர் திரு.V.K. சுப்புராஜ் I.A.S அவர்களை, என்றும் நன்றியோடு நினைவு கூறுகிறார்.

1981 ம் ஆண்டு 134 வது தரவரிசை என்பது,அகில இந்திய அளவில், I.P.Sக்கான முதல் இடம் எனினும் கூட, மருத்துவப் பரிசோதனையில் உயரக் குறைவு காரணமாக I.P.S கிட்டாமல், I.R.S (Indian Railway  Service) பணியை தேர்ந்தெடுத்தார்.

36 ஆண்டுகள் இந்திய ரயில்வேயில் பணி புரிந்த நம் நண்பர் வகித்த பதவிகள் மட்டுமல்ல, சாதனைகளும் அதிகம்.

IRFC (Indian Railway Finance Corporation) நிர்வாக இயக்குனர், இந்திய ரயில்வேயின் நிதித் துறை ஆலோசகர் (Adviser Finance, Railway Board) போன்ற பல உயர் பதவிகளில் பரிமளித்தவர்.

1994-98 ஆண்டுகளில், அதிக எதிர்பார்ப்புகளுக்கிடையே எழும்பூர் - திருச்சிராப்பள்ளி இடையே அகல ரயில்பாதையை அமைத்தது,

தானே உருவாகிய "தானே" புயல் கடலூரை தாக்கிய சமயத்தில், திருச்சிராப்பள்ளி ரயில்வே கோட்ட மேலாளராக இருந்து, ரயில் போக்குவரத்தை ஒரே நாளில் சீரமைத்து,  தமது மேலதிகாரிகளை வியப்பில் ஆழ்த்தியது ,

பல்வேறு சவால்களுக்கிடையே ஜம்மு - ஸ்ரீநகர் ரயில் பாதை என்னும் சாதனையில் ஜமாய்த்தது என்று இவரது சாதனை பட்டியல் தொடர் வண்டி போல் நீண்டு கொண்டே செல்கிறது.

தலைநகர் டெல்லியில் பணி நீட்டிப்பை ஏற்கச் சொல்லி மத்திய அமைச்சரே அன்புக் கட்டளையிட்ட போதும், பெற்ற அன்னையாருடனும், அன்னைத் தமிழுடனும் நேரம் செலவிட வேண்டும் என்பதற்காகவே சென்னை திரும்பியவர்.

பள்ளிகளில் ஆசிரியர் குறைபாடு என்றால்,  தமது செலவிலேயே அதனை சரிகட்டும் பணியை செய்வார்.

சிற்றூர்களில் யோகாசன வகுப்பு நடத்த வேண்டுமா, பொருட்செலவு என்னுடையது என்று(ம்) முன்வருவார்.

சென்னையை ஒட்டிய சேரிப் பகுதிகளில் அடிப்படை கணிப்பொறியும் /ஆங்கிலமும் சொல்லித் தர வேண்டுமா,

இன்றளவும் வார இறுதிகளில் சென்று விடுகிறார், தன் மனைவியுடன்.

இவற்றுகெல்லாம் தன் பெற்றோர்கள் காட்டிய வழியும், சுவாமி விவேகானந்தர் மற்றும் சத்திய சாய்பாபாவின் போதனைகளும் தான் முக்கிய காரணம் என மறவாமல் குறிப்பிடுவார்.

பல ஆண்டுகளாக யோகாசனம் செய்பவர் மட்டுமல்ல, எனக்கும் கற்பித்து எனது ஆரோக்கியத்தை மெருகேற்றிய ஆசானும் கூட.

கவிதைகள் மூலமும் பிறருக்கு நல்ல தகவல்களை கொண்டு சேர்க்க முடியும் என்ற நோக்கில் நிறைய எழுதுகிறார்.

இவரின் பல கவிதைகள் பள்ளிகளில் கற்பிக்கப்படுவதே அதற்கு சான்று.

சமீபத்தில்சீறிப் பாயும் என் கவிச் சிந்தனைகள்என்ற பெயரில் தாம் எழுதிய கவிதைகளை தொகுத்து நூலாக வெளியிட்டார்.




நூல் வெளியீட்டு விழாவுக்கு வந்த நண்பர்கள் கூட்டம், இவர் மீதான நட்பை சொல்லியது என்றால் , கூட்டத்தினரின் ஏகோபித்த பாராட்டு நண்பரின் கவித்திறனை சொல்லியது.

                                                நண்பர்களின் கருத்து

                                       விழா மேடையில் நண்பரின் பேச்சு

இந்த அகவையிலும் வரிப்பந்தாட்ட (டென்னிஸ்)களத்தில் எதிராளிக்கு சவால் விடும் சூரர்.

Love All , Server All” என்னும் சாய்பாபாவின் போதனையை , ஆட்டக்களத்தில் தன்னை எதிர்த்து விளையாடுபவருக்கு மட்டுமல்லவாழ்க்கையிலும் கடைபிடித்து  வரும் இவர் தான்                                                                

                          திரு.P.V. வைத்தியலிங்கம் I.R.S அவர்கள்.



18 கருத்துகள்:

  1. It's always nice to read about such wonderful people Kumar. Thanks When I am in Chennai next time, I would love to meet him if possible.

    பதிலளிநீக்கு
  2. வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே. அவரை நிச்சயம் சந்திக்கலாம். பெயர் விடுபட்டு உள்ளதே, யாரென தெரிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்

    பதிலளிநீக்கு
  3. அருமையான பதிவு. திரு வைத்திலிங்கம் அவர்கள் பள்ளிப் பருவத்தில் இருந்தே என்னுடைய நெருங்கிய நண்பர். அவரைப் பற்றிய உங்களுடைய இந்த கட்டுரை மிக மிக சரியாக இருக்கிறது என்று சொன்னால் அது மிகையல்ல. பணியில் இருந்த போதும் பணிக்கு அப்பாலும் அவர் ஆற்றிய சேவைகளை மிகத் தெளிவாக வெளியிட்டு இருக்கிறீர்கள் அவருடைய தமிழ் ஆர்வம் மிகவும் பாராட்டுக்குரியது அந்த ஆர்வம் மேலும் மேலும் வளர உங்கள் சார்பாகவும் நான் வாழ்த்து தெரிவிக்கிறேன். எனது நண்பர் பற்றிய அருமையான கட்டுரைக்கு உங்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். ஒரு நல்ல பதிவை வெளியிட்டதற்கு உங்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள். பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் நீண்ட நெடிய மட்டுமல்ல இப்பதிவினை மெருகேற்ற உங்களுக்கு நன்றி சார்

      நீக்கு
  4. உயர்திரு வைத்தியலிங்கம் அவர்களது படைப்பாற்றல் மற்றும் உயரிய பண்பு உங்கள் எழுத்துக்களின் மூலமாக முழுமையாக வெளிப்படுகிறது
    மகிழ்ச்சி
    இ வி கணேஷ் பாபு திரைப்பட இயக்குனர் தயாரிப்பாளர் நடிகர்

    பதிலளிநீக்கு
  5. நல்ல மனிதர் மட்டுமல்ல வல்லமை உடைய மனிதராக செயல்பட்டு வரும் அற்புத மனிதரைப் பற்றிய மிக நல்ல சிறப்பான பதிவு. இந்த நற்பணியினை தொடருங்கள் குமார். தகுதியற்ற மனிதர்களை கொண்டாடும் தமிழகத்தில் நல்ல மனிதர்களை கொண்டாட நாம் காரணமாக இருப்போம். மிக்க மகிழ்ச்சி குமார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிகவும் சிறப்பான கருத்தை வெளியிட்டு நல்ல மனிதரை பாராட்டிய உங்களுக்கும் பாராட்டுக்கள் தலைமை ஆசிரியரே

      நீக்கு
    2. ரயில் தோட்டத்தில் பூத்த தமிழ் மலர்
      மயில் போல இங்கும்(California, USA)
      பவனி வந்தது
      வந்த இடத்திலும்
      தம் பணிபுரிந்தது

      விவேகானந்தர் சிகாகோ சொற்பொழிவு
      பற்றிய உரையாடல்
      சாய்பாபா பாடல் என
      சரளமாய் சகஜமாய்
      சத்சங்கம் நடத்தியது

      Glad to see our friend Sri Vaidialingam
      lauded by Railway friends.

      ரயில் ஸ்நேகம் என்பதும்
      காலம் தாண்டி வரும் நிரந்தர ஸ்நேகம்
      என்று புரிகிறது இந்த Blog மூலம்.

      Thanks Kumar RajaShekhar Sir. Enjoyed your blog. Reading more such posts of yours.

      Swami Ramachandran, California, USA.

      நீக்கு
    3. Dear sir thank you for posting such a lengthy commnet. Mr. Vaithialingam sir has done/ achieved many more and what i have written about him is very little. Glad that you will be reading my other posts as well. I will be happy to know your comments at your free time. Thanks

      நீக்கு
  6. ஓர் மாமனிதரின் சாதனைகளை விளக்கிய விதம் அழகு நண்பரே...

    நூல் மாபெறும் வெற்றி பெறும் வாழ்த்துக்கள் எமது...

    பதிலளிநீக்கு
  7. ஊக்கம் தரும் தங்களின் கருத்திற்கு நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  8. வேளாண் கல்லூரியில் பூத்த தமிழ் பூ

    பதிலளிநீக்கு
  9. வகுப்பு தோழர்

    பதிலளிநீக்கு
  10. திரு வைத்தியலிங்கம் அவர்கள் திருச்சியில் பணி புரியும் போது பார்வையாளராக சர ஸ்வதி மகால் நூலகம் வந்தார். எனது பணியினை பார்த்து பாராட்டி ஊக்கம் அளித்தார். என் மீது கொண்ட அன்பின் காரணமாகவும் நூலகத்தில் உள்ள. அரிய சுவடிகளைப் பாதுகாக்கும் எண்ணத்தில் ஓய்வு பெற்ற பின்பும் பணி செய்ய வழி செய்தார். ஆனால் சூழ்நிலை சரியில்லாததால் பணியில் தொடர முடியவில்லை. அவருடைய அன்பிற்கு பத்திரமானவவர்களில் நானும் ஒருவன் என்று கூறுவதில் பெருமை அடைகிறேன்.

    பதிலளிநீக்கு