சில மாதங்களுக்கு முன்பு பற்களிலும்,ஈறுகளிலும் சிக்கல் ஏற்பட்டது. ஒரு சில பற்கள் உண்ணுகையில் ஆடுவதை போலவும் ஈறுகள் பலவீனமாக இருப்பதை போலவும் உணர்ந்தேன்.
உண்ணுவதும் சிரமாகவே
இருந்தது.
வேறு வழியின்றி பல்
மருத்துவரிடம் சென்றேன்.
ஈறுகள் உறுதியற்று காணப்படுவதாகவும் அறுவை சிகிச்சை மேற்கொள்ள வேண்டும் என்று ஒரு
சில காரணங்களை ஆங்கில மருத்துவர் அடுக்கினார்.
சுமார் 20
ஆண்டுகளுக்கு முன்னரே பெங்களூரில் ஈறுகளை கிழித்து எனக்கு
செய்யப்பட்ட
அறுவை சிகிச்சை மனதில் நிழலாடியது.
அதில் விருப்பம்
இல்லாததால் மாற்று வழியை யோசித்து தஞ்சையில் எங்கள்
வீட்டிற்கு அடுத்ததாய் குடியிருக்கும் சித்த மருத்துவரை அணுகினேன்.
மருத்துவரைப் பற்றி
சிறு குறிப்பு.
பெயர் திரு.புண்ணியமூர்த்தி.
வயது 57.
80 களின்
மத்தியில் ராஜபாளையத்தில் சச்சிதானந்த சுவாமி ஆசிரமத்தில் சித்த மருத்துவம்
பயின்றார்.
பின்னர் 90களின் துவக்கத்தில் “இயற்கை மருத்துவ சங்கம்” என்று சக மருத்துவர்களுடன் தொடங்கியவர், சுமார் 30 ஆண்டுகளுக்கும்
மேலாக சிகிச்சை அளித்து வருகிறார்.
புரிந்த சாதனைகள் : திருச்சி அருகே கல்கொண்டார் கோட்டை என்ற ஊரில் போலியோவால் அவதி பட்டு வந்த பெண்ணை முழுமையாக குணப்படுத்தியது ,
சென்னை அருகே இருக்கும் ஒரு சிற்றூரில், ஓர் இஸ்லாமியரின் நாட்பட்ட தீர்த்து வைத்தது வைத்தது என்று பட்டியல் நீண்டு கொண்டே செல்கிறது.
நன்றி மறவாத அந்த
இஸ்லாமியர் சுமார் 12 ஆண்டுகளுக்கு முன், புண்ணியமுர்த்தி அவர்களின்
மகனுக்கு நெல்லை அருகே இருக்கும் சித்த மருத்துவ கல்லூரியில் இடம் கிடைக்க உதவியதை
இன்றும் மருத்துவர் மகிழ்வோடு நினைவு கூறுகிறார்.
பழந்தமிழ் நூல்களாகிய திருக்குறள்,சிலப்பதிகாரம் போன்ற நூல்களில் கரைகண்டவர்.
இவரை அணுகும்
நோயாளிகளிடம் மருத்துவர் திருக்குறள் ஒன்றை பொருத்தமாக சொன்னபடியே சிகிச்சை அளிப்பது
வாடிக்கை.
டெல்லி ,மும்பை ,
பஞ்சாப் மட்டுமின்றி உலகின் பல்வேறு நாடுகளில் வசிக்கும் இந்தியர்கள் பலரும்
இவரிடம் சிகிச்சை பெற்றவர்கள் என்பது கூடுதல் தகவல்.
மேலும் 2014ல் “பொதிகை
மூலிகை மருத்துவ நலச்சங்கம்” என்ற சங்கத்தை நிறுவி
ஒவ்வொரு மாதமும் மருத்துவக் கூட்டங்களை நடத்தி வருகிறார் தஞ்சையில்.
மூலிகை அறிவோம், உணவே
மருந்து ஆகியவற்றை மக்களுக்கு தெரியப்படுத்துவது
இக்கூட்டத்தின் முக்கிய நோக்கம்.
தீராத தமது மகளின் நோயை தீர்த்து வைத்தமைக்காக ,ஓர் அரசு அதிகாரி இந்தக் கூட்டம் வெற்றிகரமாக நடத்திட மாதந்தோறும் இடம் அளித்து வருவது இங்கு குறிப்பிடப்பட வேண்டிய ஒன்று.
இதுவரை சுமார் 86
கூட்டங்களை திரு.புண்ணியமுர்த்தி அவர்கள் வெற்றிகரமாக
நடத்தியுள்ளார்.
நடப்பிற்கு வருவோம்.
அவரை சந்தித்த போதே
தாடை வீக்கமும் வலியும் இருந்தது.
அவரின் அறிவுரை படி நல்லெண்ணெய்யால்
வாய் கொப்பளித்து அவர் தயாரித்திருந்த பற்பொடியால்
பல் விளக்கினேன்.
சிறிது நேரத்திலேயே வலியும்
குறைந்து,
நல்ல முன்னேற்றம் தெரிய தொடங்கியது.
பின்னர் நாடி
பிடித்துப் பார்த்தார். மூலிகை பற்பொடி தயாரித்து தருவதாகவும் சொன்னார்.
அவர் என்னை வாங்கி வரச் சொன்ன மருந்துகள் நான்
இதுவரை கேள்விப்பட்டிராத சீனி காரம், ருசு, இலுப்பை அரப்பு,
தான்றிக்காய் போன்றவை.
மண்ணுக்கேத்த பொண்ணு
திரைபடத்தில் கவுண்டமணி, கருங்கல் வேர் 2 படி, கருவாட்டு ரத்தம் ,கொசுவின் சிறுநீர்
ஆகியவற்றை கொண்டு வா என்று நோயாளியிடம் சொல்லும் வசனமே நினைவுக்கு வந்தது.
இருப்பினும் மருத்துவர்
மீது கொண்ட பெருமதிப்பின் காரணமாய், மருந்துகளை
வாங்கிக் கொடுத்தேன்.
அவற்றை அரைத்து
வெயிலில் காய வைத்து சம அளவில் கலந்து எனக்கு அனுப்பி வைத்தார் இரண்டு வாரங்களில்.
இந்த பல் சிக்கல் 2 – 3 மாதங்களில் நிச்சயம் தீரும் என்று
இடையே நண்பர் திரு.
ரவீந்திரன் அவர்களின் துணைவியார் திருமதி.தேவகி பிஞ்சு வாழைக்காயுடன் துருவிய
தேங்காயை சேர்த்து உண்ணுமாறு மருத்துவ குறிப்பு கொடுத்தார்.
அவ்வாறே செய்தேன்.
அதுவோ ஈறுகளுக்கு சொல்லொண்ணா பலத்தை கொடுத்தது.
மேலும், இனிப்பு பண்டங்களை உண்பதை குறைத்துக் கொண்டேன்.
இன்று பற்கள் கெட்டி பட்டதுமின்றி ஈறுகள் திடமாயிருப்பதையும் உணர்கிறேன்.
ஆயினும் ஒரு செய்தி .....
மருத்துவர் தயாரித்து
கொடுத்த பற்பொடி நல்ல மாற்றத்தை கொடுத்தாலும் ,கருமை நிறம் கொண்ட மூலிகை
பற்பொடியை கொண்டு விளக்கியதால் எனது பற்கள் கருமையாக உள்ளன.
பல் மருத்துவரிடம்
சென்று, நவீன உபகரணங்களின் உதவியால் பற்களை சுத்தம் செய்தாக வேண்டும் விரைவில்.
அப்புறம் முக்கியமான
விஷயத்தை சொல்லவே இல்லையே.
திரு.புண்ணியமுர்த்தி
அவர்கள் எனக்கு அளித்த சிகிச்சைக்கு பணம் பெற்றுக் கொள்ள அறவே மறுத்து விட்டார்.
“நல்லார் ஒருவர்
உளரேல் அவர்பொருட்டு
எல்லோர்க்கும் பெய்யும் மழை”
இப்பதிவின் மூலமாக
அவருக்கு கோடானு கோடி நன்றிகளை தெரிவிப்பதை வேறு என் செய்ய இயலும்.
Glad to know that you are now feeling better.. for sure we are loosing lot of known natural ways of curing.. hopefully he has some followers who continue to do this
பதிலளிநீக்குவருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஸ்ரீராம். மருத்துவரின் மகனும் தந்தையை பின்பற்றி வருகிறார் என்பது மகிழ்ச்சியான செய்தி.
நீக்குஇயற்கை வைத்தியம் என்றுமே நலம்தான் நண்பரே.
பதிலளிநீக்குஇந்த நிலைக்கு காரணம் வேப்பங்குச்சியை இழிவாக நினைத்து பற்பசையின் மீது கொண்ட மோகம்தான்.
உண்மை தான் நண்பரே. அந்த காரணத்தாலே தான் ஆங்கில மருத்துவம் பக்கம் செல்லவில்லை. வருகைக்கு நன்றி.
நீக்குஅருமை குமார். மிக்க மகிழ்ச்சி உம் பல் வலி வைத்தியம் பலன் தந்தது.
பதிலளிநீக்குநன்றி பழனி.
நீக்குசிறப்பு...
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி
நீக்குபாரம்பரிய சிகிச்சை முறையின் மகோன்னதத்தை தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கும் சிறந்த கட்டுரை இது. அறிவுசார் இக்கட்டுரையின் நடுவில் கவுண்டமணியின் நகைச்சுவை வருவது நல்ல காமடி.
பதிலளிநீக்குதன் உன்னத அனுபவத்தைப் பிறருடன் பகிர்ந்த திரு குமார் அவர்களுக்கு மிக்க நன்றி.
சுயநலம் மிகுந்த இந்த ஆங்கில மருத்துவ உலகில், தன்னலம் பாராத திரு புண்ணியகோடி போன்ற சித்த மருத்துவர்கள் இருப்பது பாலை வனத்தில் உள்ள பசுந்திடல் போன்றது.
திரு குமார் செய்த புண்ணியம் அவருக்கு திரு புண்ணியகோடி கிடைத்திருக்கிறார். வாழ்க இவ்விருவரும் வளமுடன் 🙏
பி வி வைத்தியலிங்கம்
ஐயா திரு.வைத்தியலிங்கம் அவர்களின் வருகைக்கு நன்றிகள் பல. நீண்ட கருத்தினை பதிவிட்டு மகிழ்வித்து விட்டீர்கள்.
நீக்குஅரிய கருத்தை எளிய முறையில் நகைச்சுவை உணர்வோடு பதிவு செய்திருக்கிறீர்கள்....சித்த மருத்துவம் எந்த பக்கவிளைவும் ஏற்படுத்தாத மருத்துவ முறை.. இன்னும் பரவலாக வேண்டும்..
பதிலளிநீக்குஐயா திரு. சந்திரசேகரன் அவர்களின் முதன் முறையான வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. சித்த மருத்துவம் பற்றி உங்களது கருத்து மிகவும் உண்மை தான்.
பதிலளிநீக்கு