"மகள் தந்தைக்கு ஆற்றும் உதவி இவள் தந்தை
2 ம் வகுப்பிலேயே வானொலியில் பாடி பொருளீட்ட தொடங்கியவர்.
என்நோற்றான்
கொல்எனும் சொல்"
ஆம் நண்பர்களே,வள்ளுவர்
குழந்தைகளுக்கிடையே நிச்சயம் பாகுபாடு கண்டிருக்க மாட்டார் என்பதால் மேற்கூறிய
குறளை என் வசதிக்கு மாற்றிக் கொண்டேன்.
இது போன்ற குறளுக்கு பொருத்தமாக
ஒரு குழந்தை அல்ல, இருவர் இருந்தால் ..?
இரண்டு இலக்குமிகளை
வாரிசாக பெற்ற என் நண்பர் சமூக அக்கறையும் பொறுப்பும் உள்ள அரசு அதிகாரி.
தமது அதிகாரத்தை நல் வழியில் பயன்படுத்தி பெருமளவில் மக்கள் தொண்டு செய்து வரும் மனித நேயர்.
தமது அதிகாரத்தை நல் வழியில் பயன்படுத்தி பெருமளவில் மக்கள் தொண்டு செய்து வரும் மனித நேயர்.
தந்தை 8 அடி பாய்ந்து வந்ததை பார்த்து வளர்ந்ததனாலோ என்னவோ , குழந்தைகள் இருவரும் 16 அடி பாய்ந்து விட்டார்கள் மிக இளம் வயதிலேயே.
மூத்தவள் நிவேதிதா
அகவை 3ல் -
குழந்தையின் வற்புறுத்தலின்
பேரில் ,பெற்றோர் சென்னையில் புகழ் பெற்ற ஒரு பரத நாட்டிய ஆசிரியரிடம் கொண்டு சென்றனர்.
8 வயதுக்கு மேல் தான் மாணாக்களை சேர்க்க வேண்டும் என்ற கொள்கையோடு இருக்கும் ஆசிரியர்
நடனத்தில் அவளது செயல் திறன் கண்டு தன்னை மாற்றிக் கொண்டார்.
நடன வகுப்பில் சேர்த்து
கொள்ளப் பட்டாள் உடனே.
5 ம் வகுப்பு - குழந்தை தாயிடம் சொல்கிறது.
அம்மா – பள்ளி
சுற்றுலாவிற்கு ரூ. 1000 வேண்டும்.
கட்டணம் செலுத்தப்பட்டது.
அடுத்த வாரம் – அம்மா
நாளை நான் சுற்றுலா செல்லவில்லை. நான் திட்டமிட்டே தான் செய்தேன். எனக்கு பதிலாக என்னுடன்
படிக்கும் ஏழை மாணவியை அனுப்பலாமா .
இளையவள் காவியா: ஏனம்மா
எனது பழைய உடுப்புகளை கரிதுணியாக பயன் படுத்துகிறாய். ஆதரவற்ற குழந்தைகளுக்கு
அளிக்கலாமே.
"தம்மின் தம்மக்கள் அறிவுடமை மா நிலத்து
மன்னுயிர்க்கு
எல்லாம் இனிது"
தனக்கு மிஞ்சி தான் தான
தர்மம் என்ற பழமொழிக்கு மாறாக இளம் சிறார்கள் இருவரும் நடந்து கொண்டது வியப்பே
இல்லை ,மரபணுவிலேயே தான் அது இருக்கிறதே.
சில வாரங்களுக்கு முன்பு
நானும் நண்பர் ராஜேஷ் பிரபாகரன் அவர்களும் , நண்பரின் இல்லம் சென்று நீண்ட நேரம்
உரையாடிக் கொண்டிருந்தோம்.
குழந்தைகளின் தெளிவு
நம்மை அசரத்தான் வைக்கிறது.
மூத்த மகள் பள்ளியில்
படிக்கும் போதே தமது எதிர்காலத்தை தேர்ந்தெடுத்து விட்டார், இ.ஆ.ப தான் என்று.
அந்த உறுதியின் காரணமாக
தந்தை மற்றும் கல்லூரி முதல்வர் ஆகியோரின் அறிவுரைகளை செவிமடுக்காமல் , இளங்கலை வரலாற்றை தேர்ந்தெடுத்தார்.
இவரின் திறமைகள் கொஞ்ச
நஞ்சமல்ல பட்டியலிட.....
2 ம் வகுப்பிலேயே வானொலியில் பாடி பொருளீட்ட தொடங்கியவர்.
இளம் வயதிலேயே காரைக்குடியில் உள்ள கோடாக நல்லூர் கோவிலுக்காக தமது சகோதரியுடன் சேர்ந்து பாடிய தெய்வீக பாடல்கள் இசை தட்டாக வெளியிடப்பட்டுள்ளன.
மேலும் ரமணர் மகரிஷி அவர்களின் ஆசிரமத்திற்காக
இவர் பாடல் பாடியிருக்கிறார்.
7 ம் வகுப்பிலிருந்தே சக மற்றும் பள்ளியின் மூத்த மாணவர்களுக்கான நடன இயக்குனராக உருவெடுத்தவர்.
7 ம் வகுப்பிலிருந்தே சக மற்றும் பள்ளியின் மூத்த மாணவர்களுக்கான நடன இயக்குனராக உருவெடுத்தவர்.
தடகள வீராங்கனையாகவும் பரிமளிதிருக்கிறார்.
தாம் படித்த கல்லூரியில் 2019 – 2020 க்கான மாணவர் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டு சிறந்த பங்களிப்பை செய்தவர்.
பொது புலமைக்கான கல்லூரி
மற்றும் படிப்பை முடித்து வெளியேறும் சிறந்த
மாணவிக்கான கல்லூரி விருது என விருதுகளின் பட்டியல் நீளுகிறது.
வரலாற்றை அகலவும் மற்றும்
ஆழவும் உழுது இன்று துறையின் முதல் மாணவியாக தேர்ச்சி பெற்றிருக்கிறார்.
தேசிய மாணவர் படையில் பணியாற்றியவர்.
தேசிய மாணவர் படையில் காட்டிய
செயல் திறன் காரணமாக குவாலியர் நகரில்
நடந்த ராணுவ அதிகாரிகளுக்கான பயிற்சி வகுப்பிற்கு தமிழகத்திலிருந்து
தேர்ந்தெடுக்கப்பட்ட மூவரில் ஒருவர்.
2019 ம் ஆண்டுக்கான குடியரசு தின மாணவர் அணிவகுப்பில் பங்கேற்றவர், தலை நகர் டெல்லியில்.
இதில் சிறப்பு சென்னையிலிருந்து
தேர்ந்தெடுக்கப்பட்ட 36 மாணவர்களில் ஒருவர்
என்பது.
கவிதைகள் மூலம் தமது
ஆசிரியரின் கவனத்தை ஈர்ப்பவர்.
அருமையான ஓவியர்.
பரதத்தை முழுமையாக கற்று தமது
சகோதரியுடன் சேர்ந்து திருமதி வீணை காயத்ரி அவர்களின் தலைமையில் நடன அரங்கேற்றத்தை
நிறைவு செய்தவர்.
நிவேதிதாவின் சரித்திர
பார்வை சற்றே மாறுபட்டது.
சோழர்கள் இலங்கை , கடாரம்
போன்ற நாடுகள் மீது படையெடுத்ததால் , அண்டை நாடுகள் மீது படை எடுத்த தேசத்தின்
பட்டியலில் நம் பரதமும் உண்டு என்ற என்
எண்ணத்தை இவர் மாற்றுகிறார்.
ஐரோப்பிய நாடுகள் மற்ற
நாடுகள் மீது படையெடுத்தது ஆதிக்கம் செலுத்தவும் , செல்வத்தை அள்ளிச் செல்லவும்
தான் , ஆனால் சோழர்கள் செய்தது தேச விரிவாக்கம் மட்டுமே என்று மாறு பட்ட கோணத்தில்
இவர் நம்மை சிந்திக்க வைக்கிறார்.
சுதந்திர போராட்ட
தலைவர்களிலேயே இன்னும் அதிக மதிப்பும் மரியாதையும் கொடுக்கபட்டிருக்க
வேண்டியவர்கள் நேதாஜி அவர்களும் மற்றும் வ.வு.சி அவர்களும் என்ற இவரது குரலில் ஆதங்கம்
நன்கு தெரிகிறது.
இளைய மகள் காவ்யா தந்தையை
போலவே சீட்டி அடித்து பாடல் பாடுவதில் மிகவும் திறன் பெற்றவர்.
சொன்ன கணத்திலேயே எந்த
ஒரு பாடலையும் சீட்டியிலேயே முழுமையாக பாடி நம்மை சொக்க வைக்கிறார்.
மிக தெளிவாக சிந்திக்கும்
இவர் நீண்ட கால திட்டம் ஏதும் வைத்து கொள்ளவில்லை.
மாறாக வாழும் ஒவ்வொரு நாளும்
இயன்ற வரை தாம் பிறருக்கு எந்த அளவிற்கு உதவியாக இருக்கிறோம் என்பதை குறிக்கோளாக
கொண்டே வாழ்கிறார்.
ஊட்டியை பூர்வீகமாக கொண்ட
தந்தை,
சாதி / மத பேதம் ஊட்டி வளர்க்கவில்லை ,
மாறாக தாம் சார்ந்த பெருமை மிகு சமூகத்தை
பற்றி அணு அணுவாக சொல்லி கொடுத்திருகிறார் மகள்களுக்கு.
( இந்த பெருமை மிகு
சமூகத்தை பற்றி ஒரு பதிவிட விரும்புகிறேன் பின்னர்)
இவ்வளவு சொல்லி விட்டு
பெற்றோரை பற்றிய தகவலை சொல்லவில்லை என்றால் எப்படி.
தாயார் முனைவர் திருமதி
ரேவதி. கல்லூரி உதவி ஆசிரியர்.
தந்தையார் எனது நீண்ட கால
அருமை நண்பர் காவல் துறை உதவி ஆணையர் திரு. கிருஷ்ணமுர்த்தி.
குழந்தைகள் தாம் விரும்பிய
பாதையில் வெற்றி நடை போட நண்பர்கள் , சான்றோர்கள் ஆகியோரின் ஆதரவையும் நல் வாழ்த்துகளையும்
வாரி வழங்குமாய் இரு கரம் கூப்பி வேண்டி கொள்கிறேன்.
இதை விட மகிழ்ச்சி ஏது...? வாழ்த்துகள் பல...
பதிலளிநீக்குமுதல் மனிதராய் வந்து வாழ்த்தியமைக்கு நன்றி நண்பரே.
நீக்குசிறப்பான குழந்தைகள். இருவருக்கும் வாழ்த்துகள். பெற்றோர்களுக்கு பாராட்டுகள்.
பதிலளிநீக்குநண்பரின் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றிகள்பல.
நீக்குதிருவள்ளுவரின் குறளில் திருத்தம் செய்த நவீன திரு. வள்ளுவருக்கு முதற்கண் வணக்கம்.
பதிலளிநீக்குதனக்கு கிடைத்ததை பிறருக்கு தானம் செய்யும் குணம் கொண்டவர்கள் லட்சத்தில் ஒருவரே அந்த ஒருவர் நிவேதிதாவாக இருப்பது பெற்றோருக்கே பெருமை.
இந்த தானத்தை படித்ததும் என் வாழ்வில் நிகழ்ந்த ஓர் சம்பவம் என்னுள் நிழலாடியது.
நானும் நண்பரது குடும்பமும் ஒரு நிகழ்ச்சிக்காக அபுதாபியிலிருந்து இந்தியா வந்திருந்தோம் (2010-ம் வருடம்) மகிழுந்தில் மதுரைக்கு சென்றிருந்தோம்
மரத்தடி நிழலில் சற்று நேரம் நின்றிருந்தபோது சகோதரி எங்களுக்கு ஆப்பிள் பழத்தை நறுக்கிக் கொடுத்துக் கொண்டு இருந்தார் ஓட்டுனர் இருக்கையிலிருந்த நான் முழு ஆப்பிளை கையிலிருந்து வாயில் வைத்து கடித்தபோது சாலையில் சென்ற ஓர் வயதானவர் என்னிடம் கையேந்தி விட்டார் நான் சட்டென சகோதரியிடம் கத்தியை வாங்கி பல் பட்ட சிறு பகுதியை நறுக்கி துடைத்து விட்டு முழு பழத்தையும் பெரியவருக்கு கொடுத்தேன் நன்றி சொல்லி கும்பிட்டு விட்டு கடந்து செல்லவும்.
சகோதரி கேட்டார்
ஏண்ணே வேற பழத்தை நான் கொடுத்து இருப்பேன்ல... திங்கிறதை ஏன் கொடுத்தீங்க ?
இல்லம்மா அவரு கேட்டதும் கையிலுள்ளதை கொடுக்கணும் அதான் உண்மையான தர்மம் உன்னிடம் பழம் இல்லாமலும் இருக்கலாம் நான் ஏமாந்து விடமாட்டேன் பிறகு வாங்கி சாப்பிடலாம் ஆனால் அவருக்கு.... ?
உடன் நண்பர் கேட்டார்
அப்படினா மோதிரத்தை கேட்டால் கொடுந்துருவீங்களா ?
இதுக்குத்தாங்க நான் இதுவரை தங்கநகை அணியிறது கிடையாது
எப்படிங்க உடனே சமாளிக்கிற பதிலை வச்சு இருக்கீங்க....
நண்பரின் மனைவியை நான் தங்கையாக தத்து எடுத்துக் கொண்டதால் பலமுறை அபுதாபி வீட்டுக்கு போனால் அடிக்கடி என்னை நக்கலடிப்பார்
"உங்க அண்ணன் தர்மம் கேட்டால் வாயில உள்ள எச்சியை தருவாருடி"
என்று இது எனக்கு சற்றே அருவெறுப்பாக தோன்றினாலும் பிறகு இதுவும் நல்லாத்தானே இருக்கு என்று நினைத்துக் கொள்வேன்.
அதைப்போல் காவியாவும் தனக்கு உள்ளவைகளை பிறருக்கு கொடுக்க நினைக்கும் உள்ளத்தை இறைவன் ஊடுறுவிப் பார்ப்பான்
காவியாவும் எதிர்காலத்தில் காவியம் படைத்திட எமது உளமார்ந்த வாழ்த்துகள்.
நிவேதிதாவும் எதிர்கால வேலு நாச்சியாராக சிறப்புற வாழ்ந்திட எமது மனமார்ந்த வாழ்த்துகள்.
வாழ்த்துகளோடு
கில்லர்ஜி
தேவகோட்டை
அந்த நவீன திருவள்ளுவர் தாங்கள் தான் என்பதை என் கருத்தின் மூலம் உலகிற்கு தெரியப்படுத்துகிறேன் நண்பரே.
நீக்குஆப்பிள் பழத்தை இறைஞ்சியவரிடம் அளித்ததிலேயே தான் 8 ம் வள்ளல் என்பதை சொல்லாமல் சொல்லியிருக்கிறீர்கள் . படிப்பதற்கு நெகிழ்வாக தான் உள்ளது.
தங்களின் மிக நீண்ட கருத்திற்கும் அழகான வாழ்த்திற்கும் நன்றிகள் பல நண்பரே.
நல்லதொரு குடும்பம் பல்கலைக் கழகம் என்பார்கள், தங்கள் நண்பரின் குடும்பமும் பல்கலைக் கழகம்தான்.
பதிலளிநீக்குகுழந்தைகளை அவரவர் விருப்பத்திற்கேற்ப வளர அனுமதிப்பவர்கள் இன்று குறைவினும் குறைவு.
தங்கள் நண்பர் போற்றுதலுக்கு உரியவர்
தங்கள் நண்பரின் மகள்களும் போற்றுதலுக்கு உரியவர்கள்
போற்றுவோம்
எதிர்காலத்தில் வெற்றிமேல் வெற்றி பெற்று , வாழ்வாங்கு வாழ வாழ்த்துவோம்
உண்மை நண்பரே.
நீக்குகுழந்தைகளின் விருப்பதை விட தாம் அடையததை தமது வாரிசுகள் மூலம் அடைய நினைக்கும் சுயநல பெற்றோர்களே இன்று அதிகம்.
தங்கள் வருகைக்கும் வாழ்த்திற்கும் நன்றி.
நன்றி ஷபி
பதிலளிநீக்குநல்லொதொரு மகிழ்வான பதிவு.
பதிலளிநீக்குமனம் நிறைவு
நன்றி டா நண்பா.
நீக்குநல்லதொரு மகிழ்வான பதிவு. மனம் நிறைவு
பதிலளிநீக்குமகள் தந்தைக்காற்றும்....ரசித்தேன். பெருமைப்படவேண்டிய செய்தி. பெருமைப்படவேண்டிய மகள்கள்.
பதிலளிநீக்குமுனைவர் அவர்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. சில வாரங்களாக தங்களின் பதிவை காண இயலவில்லை.ஆவலாய் காத்திருக்கிறோம்.
நீக்குஆகச் சிறந்த கற்பித்தல்
பதிலளிநீக்கு"தாம் சார்ந்த பெருமை மிகு சமூகத்தை பற்றி அணு அணுவாக சொல்லி கொடுத்திருகிறார் மகள்களுக்கு"
அழகாய் உங்கள் கருத்தை பதிவிட்டுள்ளீர்கள்.வருகைக்கு மிக்க நன்றி.
பதிலளிநீக்குஇப்பெருமைமிகு பிள்ளைகளை குடும்பத்துடன் சந்தித்து உரையாடுவதற்கு எனக்கும் ஒரு வாய்ப்பு ஏற்படுத்திக் கொடுத்த திரு.குமார் அவர்களுக்கு நன்றி. நிவேதிதாவும், காவியாவும் பல திறமைகளை ஒருங்கே அமையப் பெற்றவர்கள். இதற்கு முழுமுதற் காரணம் அவருடைய பெற்றோர்களும், அவர்கள் சார்ந்த சமூகமே காரணம் என்று சொன்னால் மிகையாகாது. இவர்களுடைய முதல் இருபது வயதிற்குள்ளாகவே சமூகம் சார்ந்த அக்கறையும் அதற்கு அவர்களால் முடிந்த உதவிகளையும் செய்து வருவது இது வெறும் ஆரம்பமே, இனிமேல்தான் இவர்கள் மேலும் பல சாதனைகள் புரிய உள்ளார்கள் என்பது நம்மால் புரிந்து கொள்ள முடியும். இவர்கள் மேலும் பல சாதனைகள் புரிய அனைத்து விதமான ஆதர வும், வழிகாட்டுதலும் கிடைக்கட்டும் என்ற விருப்பத்துடன் என்னுடைய வாழ்த்துகளும். தொடர்ந்து நல்ல செய்திகளை பகிர்ந்துவரும் திரு.குமார் அவர்களுக்கு நன்றியும் பாராட்டுகளும்.
பதிலளிநீக்கு- நெ.பி.ராஜேஷ்
சித்தாலபாக்கம்,சென்னை
உண்மை தான் நண்பரே இது வெறும் ஆரம்பம் தான் என்பது. என்னுடன் வந்து நீண்ட நேரம் செலவிட்ட தங்களுக்கு நன்றிகள் பல.
பதிலளிநீக்கு