திரைத்துறையில் நீண்ட காலம் கொலேச்சியவர்கள்
நிறைய இருந்தார்கள்.
இன்றும்
கோலேச்சும் முதியவர்களும்
இருக்கிறார்கள்.
ஆனால் திறமை இருந்தும் பல வெற்றிப் படங்களை
கொடுத்தும் கூட , சில காலமே புகழ் பெற்று காணாமல் போனவர்கள் ஒரு
சிலர் இருக்கத் தான் செய்கிறார்கள்.
அவர்கள் பல தரமான
படங்களை அளித்தவர்கள் தான்.
அதன் காரணமாகவே இன்றும் நம் மனதில் அடிக்கடி
வந்து செல்பவர்கள் தான்.
மோகன் –ஒன்றல்ல
இரண்டல்ல , சுமார் 25 மேல்
வெள்ளி விழா கொண்டாடிய படங்களின் சொந்தக்காரர்.
“கோகிலா” வில்
துவங்கிய பயணம் பல ஏற்றங்களை கண்டு வந்தாலும், உருவம்
படம் வந்த பின் இவரது உருவம் திரையில் காணாமல் போனது.
ஒரு
வேளை சொந்த குரல் தான் காரணமா ..... ?
கார்த்திக்
– மற்ற நடிகர்களை விட மனதை கொள்ளை கொள்ளும் அழகு.
பல
வருடங்களுக்கு முன் உள்ளத்தை அள்ளி கொள்ளை கொண்டு போனவர் தான்.
இன்று
வரை அவ்வப்போது சிறிய கதாபாத்திரங்களில் தலை காட்டிக்கொண்டிருப்பதோடு சரி.
நேரம்
தவறாமை தான் காரணமா ..?
பாக்யராஜ் – வேட்டிய மடிச்சு கட்டிய இந்த திரை கதை மேதையின் திறமை அப்புறம் என்ன
ஆனதோ தெரியவில்லை.
மாதவன்
– வந்த புதிதில் இவரது அலை பாயத் தான் செய்தது.
இன்று ..?
ராஜேந்தர்
–கதை, திரை
கதை, பாடல்கள், இசை
, இயக்கம் , ஒளிப்பதிவு
மற்றும் நடிப்பு என பல பொறுப்புக்களில் பரிமளித்து ஒரே நேரத்தில் செய்து, பல வெற்றி படங்களை அளித்தவர்.
இன்று
இவரது முகவரி அவ்வப்போது மீமீஸ்களிலேயே தென்படுகிறது.
விவேக்
– இந்த சின்ன கலைவாணரை இனி சின்ன திரையில் தான்
பார்க்க முடியுமா – தெரியவில்லை.
கவுண்டமணி
/ செந்தில் – இவர்களது
பங்களிப்பு பல சொதப்பல் படங்களை தூக்கி நிறுத்தி இருக்கிறது என்றால் மிகையில்லை .
இன்று
எங்கிருக்கிறார்கள் .. முதுமை தான் காரணாமா ..?
வடிவேலு
– மீமீஸ்களின் மன்னர் அல்ல, சக்ரவர்த்தி. இன்றும் நம்மை மகிழ்விக்கிறார் சின்ன திரையில்.
ஆனால்
வெண் திரையில் வட போச்சே .
ஏன்
– கதாநாயகனாக மட்டுமே நடிப்பேன் என்ற கொள்கை தான்
காரணமா ..?
சந்தானம்
– நீண்ட காலம் உலா வர இயலாததிற்கு காரணம் ,
வடிவேலு
போன்ற கொள்கையா ..?
காற்றின்
மொழியே , மலரே மவுனமா போன்ற பாடல்களை அளித்த வித்யாசாகர்
இன்று மவுனமாகி விட்டார் பெரிதும்.
பொங்கியதே
காதல் வெள்ளம் , கண்ணுக்குள் நூறு நிலவா போன்ற நல்ல பாடல்களை
அளித்த தேவேந்திரன் எங்கே இன்று ..?
ஒ
காதல் என்னை காதலிக்கவில்லை , சேலை கட்டும் பெண்ணுகொரு வாசமுண்டா போன்ற
பாடல்களை தந்த இசை அமைப்பாளர் ஹம்சலேகாவின் வாசம் எங்கே ..?
நீ
ஆண்டவனா , நாடோடி மன்னர்களே என்று வானமே எல்லை யிலும் ,
மறக்க
முடியவில்லை என்று ஜாதிமல்லியிலும் அருமையான பாடல்களை அளித்த மரகதமணி அவர்களை
நம்மால் மறக்கத்தான் முடியவில்லை.
எனக்கு
தெரிந்து பழம் பெரும் நடிகர் சிவகுமார் அவர்கள் மட்டுமே ஓய்வை அறிவித்த நடிகர்.
பிறரை
பற்றி விடை தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.
பி.கு : நண்பர் கில்லர்ஜி
அவர்களை அச்சு எடுத்து, அவர் எழுதுவதை போன்றே ஒரு பதிவை எழுத முயன்றுள்ளேன்.
சுமாராக இருந்தாலும் கூட நற்பெயர்
அவருக்கே.
இல்லாட்டி கூட ...
மீசைக்கார நண்பர் கில்லர்ஜியின் எழுத்துலக வாரிசுக்கு வாழ்த்துகள்
பதிலளிநீக்குஎனது வலைபூ குருவுக்கு நன்றிகள் பல.
நீக்குதங்களின் ஆதங்கமும் அருமை... ஆனால், 'ஜி'யின் சிந்தனை வேறு...
பதிலளிநீக்குஉண்மை நண்பரே.
நீக்குஉயர உயர பறந்தாலும் ஊர் குருவி பருந்தாகாது என்பது தெரிந்தே வைத்திருக்கிறேன். எனினும் முயற்சி திருவினை ஆக்குமே.
வணக்கம் நண்பரே
பதிலளிநீக்குஇந்த பதிவின் வழி எனக்கு தோன்றுவது கண்ணதாசனின் வரிகளான
"வந்தவர் எல்லாம் தங்கி விட்டால்
இந்த மண்ணில் நமக்கே இடமேது"
என்ற பாடலே அவர் எழுதிய அர்த்தம் வேறு நான் இங்கும் பொருத்திப் பார்க்கிறேன்.
தாங்கள் குறிப்பிட்டவர்கள் எல்லோருக்கும் குரு ஐந்தாம் வீட்டில் குடியிருந்து இருக்கிறான் ஆகவே புகழும், பணமும் கிடைத்து இருக்கிறது
குரு இடம் பெயரும்போது இவர்களின் வாழ்வும் தடம் பெயருகிறது
எனது புகைப்படத்தை தங்களது தளத்தில் வெளியிட்டு என்னையும் பிரபலமாக்கிய தங்களுக்கு நன்றி நண்பரே...
தங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி நண்பரே.
நீக்குசொல்ல மறந்து விட்டேனே ..... நீங்கள் ஏற்கனவே வலைப்பூவில் மிகவும் பிரபலமானவர் தான். நான் தான் உங்கள் மூலம் ஏதும் ஆதாயம் கிடைக்குமா என்று பார்க்கிறேன்.
வந்தவர் எல்லாம் தங்கி விட்டால்... கில்லர்ஜி போலவே எனக்கும் அதே தான் தோன்றியது.
பதிலளிநீக்குதங்கள் கருத்திற்கு நன்றி. சிலர் சுமார் 40 வருடங்களாக இருக்கிறார்களே.. :)
நீக்குநீ சொல்ல வந்ததெல்லாம் சரி. ஆனால் கார்த்திக் மற்ற நடிகரை விடெல்லாம் அழகு என்பதில் கவனக்குறைவு தெரிகிறது.
பதிலளிநீக்குஉன் ஆதங்கம் நன்கு புரிகிறது.என்ன செய்ய , என் ரசனை அப்படி.
நீக்குஉங்களின் கருத்தை படிக்க படிக்க இன்பமாய் இருந்தாலும் , உண்மை நிலவரம் என்பது மலைக்கும் சிறு மண் துகளுக்கும் உள்ள வேறுபாடு நண்பரே.
பதிலளிநீக்குஅன்று திறமைகள் அடையாளம் காட்டப்படுவது குறைவு. இன்றோ திறைமைகளை வெளிக்கொண்டு வருவதற்கு பல ஊடகங்கள் இருக்கின்றன.
பதிலளிநீக்குதங்களின் கருத்து உண்மை தான் .
பதிலளிநீக்குஇதில் ஊடகங்கள் பெரும் பங்கு வகிப்பதாய் எண்ணுகிறேன்
நல்ல முயற்சி. வெற்றி பெற்றுள்ளீர்கள்.
பதிலளிநீக்குமுனைவர் அவர்களின் வருகையும் கருதும் மகிழ்ச்சி அளிக்கின்றன .
பதிலளிநீக்குநல்ல முயற்சி வெற்றி பெற வாழ்த்துக்கள்
பதிலளிநீக்குதங்களின் வருகைக்கு நன்றி
பதிலளிநீக்கு