புதன், 27 மார்ச், 2019

பழமொழியை பொய்யாக்கியவர்

இந்த பதிவின் முதற்பகுதியை இந்த இணைப்பில் காணலாம்.


“Jack of all , master of none” என்று ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு.

தமிழில் இதற்கு தொடர்புடைய ஒரு பழமொழி உண்டென்றால்
"அகல உழுவதை விட ஆழ உழுவதே மேல்" என்பதே.

அனைத்து விஷயங்களிலும் அரை குறையாய் கற்று சொதப்புவதை விட
ஒரே விஷயத்தை முழுமையாக கற்று தேற வேண்டும் என்ற பழமொழியை
பொய்யாக்கி அகலவும் உழுதிருக்கிறார் ஆழவும் உழுதிருக்கிறார் ஒருவர்.

இவரை சந்திக்க நானும் நண்பர் ராஜேஷும் நேரம் கேட்டது டிசம்பரில்
நேரம் கிடைத்தது பிப்ரவரியில் இறுதியில்.                                

                                             நானும் உமர் அவர்களும் 


                                        நண்பர் ராஜேஷுடன்

அந்த அளவிற்கு மனித இதயம் ஓய்வின்றி துடிப்பதை போல, பல்வேறு பணிகளில் சுழன்று கொண்டிருக்கிறார்.

ரத்தவியல் தொடர்பான படிப்பை முடித்தவருக்கு,
மருத்துவ ஆய்வுக்கூடங்களில் பணிபுரிய துவங்கிய பின்னர் தான்
அதிலிருக்கும் ஒரு சில விரும்பத்தகாத விஷயங்கள் பிடிபட துவங்கின.

இளைஞனுக்கே உரித்தான நேர்மையும் கோபமும் வெளிப்பட மெல்ல மெல்ல அத்துறையிலிருந்து விலகி ஹோமியோபதி மருத்துவம் பயின்றார்.

இந்த மருத்துவத்தில் சரியான மருந்து அளவில் கொடுக்கப் பட்டால் அற்புதமாய் வேலை செய்யும் என்பதும் , 
தவறான அளவில் கொடுக்கப் பட்டால் அதீத கேடும் என்பதே அந்த மருத்துவத்தின் சிறப்பு.

அப்படியென்றால் இதையும் தாண்டி வேறேதும் சிறந்த மருத்துவம் இருக்க முடியுமா ..?

தேடினார்.

தொடு சிகிச்சை பற்றி கேள்வியுற்றார். அதை பற்றி ஆராயலானார்.

அக்குபங்சர் என்பது ஓர் உயர் நிலை மருத்துவம் என்பதை உணர்ந்த அவர் மெல்ல மெல்ல அதை நோக்கி திரும்ப தொடங்கினார்.

2002ல் திரு. போஸ் முஹம்மது மீரா அவர்கள் நடத்தி வந்த தொடு சிகிச்சை நிலையத்தில் ,

மருத்துவ அறிக்கைகளை ஒரு பொருட்டாகவே மதிப்பதில்லை என்றும் ,

நோயாளிகளுக்கு சிகிச்சை நேரம் என்பது வெறும் 1 நிமிடமே என்பதும் அவரை வெகுவாக ஈர்த்தது.

அதனை முழுமையாக கற்று தேர்ந்தார்.  
            
இந்த அற்புத கலையை மக்களிடம் கொண்டு சேர்ப்பதிலும் , கம்பம் கல்வி குழுமத்தை நிறுவி இக்கலையை பிறருக்கு கற்பிப்பதிலும் ,

திரு .போஸ் என்ற விஜயனுக்கு வில்லாய்  இருந்தார் , இன்றும் இருக்கிறார்.

தற்போது கம்பம் கல்வி குழுமத்தின் முதல்வராக பணி புரிந்து வருகிறார் .

திரு. போஸ் அவர்கள் ஒரு பல்கலை வித்தகர் என்றால் , இவர் ஒரு  தகவல் பெட்டகம் என்பது மிகையே அல்ல.

இவர் வகுப்பெடுக்க துவங்கினால் குண்டூசி விழும் ஓசை பக்கத்து அறையிலிருந்தும் கேட்கும்.

அக்குபங்சரின் வரலாறு ஆகட்டும் , அதன் தத்துவங்கள் அல்லது கிருமிகள் பற்றிய பாடம் ஆகட்டும் ,   

இவர் அழகான பேச்சு ஆர்வமற்றோரையும் தம்பால் ஈர்க்கும்  ஈர்க்கும்.

அருமையான எழுத்தாளர்.

உடல் , மனம் , மருத்துவம் தொடர்புடைய பல நூல்களின் ஆசிரியர் இவர்.

தொடு சிகிச்சை துறைக்கு வரும்முன்னே ஒரு சில கவிதை நூல்களையும் எழுதி வெளியிட்டிருக்கிறார்.

டாக்டர் விகடன் , குங்குமம் போன்ற போன்ற சஞ்சிகைகளிலும் தொடர்கள் எழுதியுள்ளார்.

இவரது முதல் நூலானஉடலின் மொழி” வெறும் 5 நாட்களில் எழுதப்பட்டது.
உண்ணும் உணவுகளை பற்றிய விழிப்புணர்வு வேண்டுமா .

இவரது “Kitchen to clinic படியுங்கள்.

“Sodium Lauryl sulfate “ என்ற வேதி பொருள் 2  / 4 சக்கர ஊர்திகளை பழுது பார்க்கும் இடங்களில்,

தரையில் உண்டாகும் கருமை நிற கறையை போக்கும் ஒரு வேதி பொருளே என்பதும்,

நமது பற்பசைகளில் அது பயன்படுத்தப் படுகிறது என்ற செய்தியையும்
Kitchen to clinic” நூலில் படித்தால் நாம் பற்துலக்கவே 100 முறை யோசிப்போம்.

கவலை வேண்டாம் , அதற்கான தீர்வையும் அவர் சொல்கிறார்.

நோயில்லாமல் வாழ வேண்டுமா - "நோய்களிலிருந்து விடுதலை"

தடுப்பூசி தேவையா ஒன்றா - "தடுப்பூசி - வெளிப்படும் உண்மைகள்"

தற்போது பிரபலமாகி வரும் பேலியோ உணவு முறை பற்றி தமது அடுத்த நூலில் எழுதவிருக்கிறார்.

பழங்கால பிராமி  தமிழெழுத்துக்களை கற்க வேண்டுமா ..?

இவர் கற்றுக்கொண்டதோடு முறையாய் அதற்கான ஏற்பாடும் செய்கிறார்.

                                     அகழ்வாராய்ச்சி பணியில் 

பல ஊர்களுக்கு சென்று கேட்பாரற்று கிடைக்கும் கல்வெட்டுக்களை ஆராய்ச்சி செய்து சட்ட ரீதியாக தேவைப்படும் நடவடிக்கைகளை மேற்கொள்கிறார் உண்மையை வெளிக்கொணர.

பிராமி எழுத்துக்களை பயின்றோருக்கு சான்றிதழ் வழங்கும் விழாவில்

கஜா புயலா - அங்கு பறக்கிறார் தமது குழுவினருடன்.

கேரளாவில் வெள்ளமா - நேரில் சென்று உதவி கரம் நீட்டுகிறார்.

திரு . போஸ் அவர்கள் இறைவனை தேடுவது ஒரு தனி மார்க்கம் என்றால் , இவர் மனித தொண்டாற்றுவதில் இறைவனை காண்கிறார்.

அது மட்டுமல்ல நண்பர்களே.

எழுத்தாளர்களை இவர் ஊக்குவிக்கும் முறை முற்றிலும் வேறு பட்டது.

தம்முடைய மாணவர்களை ஒரு குழுவாக இணைத்து எழுத்தாளர்களின் நூல்களை படிக்கச் செய்கிறார்.

பின்னர் மாணவர்களின் கருத்துக்களை / விமர்சனங்களை கை அடக்க புத்தகமாக அச்சடித்து அதனை நூலாசிரியர்களுக்கு பரிசளித்து விடுகிறார்.
இதன் மூலம் சுமார் 250 - 300 நூல்கள் ஒரே நேரத்தில் விற்பனையாவது மட்டுமல்ல,

வெளிப்படையான கருத்துக்கள் / விமர்சனங்கள் எழுத்தாளர்களுக்கு தூண்டு கோலாகவும் அமையும் என்பதில் ஐயமில்லை.


                                     எழுத்தாளர்களுடன்

நவீன மருத்துவத்தில் புதிதாக ஏதேனும் வெளியிடப்படுகிறதா .

அதை பற்றி அறிந்து கொள்வதோடு அதன் நன்மை தீமைகளை மக்களுக்கு தெரியப்படுத்துகிறார்.

கீழடி பழமையானதா, சிந்து சமவெளி பழமையானதா ?

இவர் ஆதாரத்துடன் வாதிடுகிறார்.

தஞ்சையில் எத்தனை தங்கும் விடுதிகள் உள்ளன ..?

இந்த மருத்துவம் சம்பந்தப்பட்ட அரசாணை எந்த நாட்டில், எப்போது வெளியிடப்பட்டது.

16  ம் நூற்றாண்டில் எந்த நாடு செல்வ செழிப்புடன் இருந்தது.

தற்போதைய இந்திய மருத்துவ குழுவின் தலைவர் யார் , இப்பதவிக்கு வரும் முன் என்ன செய்துகொண்டிருந்தார்.

30  வருடங்களுக்கு முன்பு ஆப்பிரிக்கா கண்டத்தில் வந்த நோய் என்ன , அது எத்தனை நாட்களில் சரி செய்யப்பட்டது .

இந்த நூற்றாண்டில் இந்த நாட்டில் ஆலயம் கட்டப்பட்ட போது என்னென்ன நிகழ்ச்சிகள் ஏற்பட்டன.

இணையத்தில் தேட வேண்டாம்.

இவரிடம் பேசிக்கொண்டிருந்தாலே போதும்.

நமக்கு வேண்டிய விவரங்களும் கிடைக்கும், சற்று அதிகமாகவும் கிடைக்கும்.

தீராத அறிவு வேட்கையே இவரின் வெற்றிக்கு காரணம்.

2010ல் இவர் எழுதியவீட்டுக்கொரு மருத்துவர்” நூலை வெளியிட்டது
நம்மாழ்வார் ஐயா அவர்கள் தான்.


தமது நண்பர் பட்டுக்கோட்டை பிரபாகர் அவர்களை அடிக்கடி சந்தித்து பேசினாலும்,
ஒரு முறை கூட அவரின் புகழ் பெற்ற கதா பாத்திரங்களான பரத் மற்றும் சுசீலா பற்றி இவர் பேசியதில்லை என்பது வியப்பை தரும் விஷயம் தான்.

சுமார் 5 ஆண்டுகள்  திரு. போஸ் அவர்களுடனே இருந்து, நண்பராக பெருமதிப்பை பெற்ற இவர்,
அவரது உறவினராகவும் ஆனார், மருமகன் என்ற முறையில்.

இந்திய ஆட்சி பணி அதிகாரி ஆவதற்குரிய அனைத்து திறமைகளும் இருந்தும் இவர் ஏன் அந்த பதவிக்கு முயலவில்லை என்ற வினாவிற்கு ,

ஒரு மருத்துவனாய் நோயற்ற சமுதாயம் உருவாக்குவதே முதற்கடமை என்று அதற்குரிய விடை வருகிறது.

இப்படி தாம் தொட்ட துறையில் எல்லாம் ஒளிரும் மனிதர் கணீர் குரலில் பேசி கவர்பவர் இப் பதிவின் நாயகர்,

மரியாதைக்குரிய எங்கள் அக்குபங்சர் ஆசான் திரு.உமர் பாரூக் அவர்கள்.

62 கருத்துகள்:

  1. பதில்கள்
    1. Master of all and he is a jack to thousands and thousands of people. Proud to be under his shade..

      நீக்கு
    2. Thanks for the comments and yes you are echoing most of the students feelings. :)

      நீக்கு
    3. சிறப்பான பதிவு, இது அவரின் அனைத்து தோழர்கள் மற்றும் மாணவர்களின் ஒருமித்த கருத்தாக பார்க்கிறேன். அருமை.

      நீக்கு
    4. We, who are student and acupuncturist have named him a 'encyclopaedia'. He is a humanist and timing humarist.
      Lot of thanks

      நீக்கு
    5. Thanks for your comments. You have very well described

      நீக்கு
    6. இப்படி ஒரு உயர்ந்த ஆசான் கிடைக்க நாங்கள் கொடுத்து வைத்தவர்கள் . நல்ல மாணர்களாக ஆசான் வழி சென்று , நோயற்ற சமுகத்தை உருவாக்குவதே எங்கள் முதற் கடமை ...

      நீக்கு
    7. நீங்கள்￰ சொன்னது முற்றிலும் உண்மை.
      அந்த இலக்கை அடைய நாம் அனைவரும் பாடுபடுவோம்

      நீக்கு
  2. நல்லதொரு அறிமுகம் ஐயா... நன்றி...

    மென்மேலும் சிறக்க வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  3. தங்கள் வருகைக்கும் பாராட்டுகளுக்கும் மிக்க நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  4. உமர் சார் எங்கள் ஆசான் என்று கூறிக் கொள்வதில் மிகவும் பெருமிதம் கொள்கிறோம்.

    பதிலளிநீக்கு
  5. அவருடன் நாங்கள் இருப்பதை பெரும் பாக்கியமாக நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தோழர் பழனிச்சாமியின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

      நீக்கு
  6. ஆசானுக்கு இன்னும் நிறைய சிறப்புகள் இருக்கின்றன. அதில் முக்கியமான ஒன்று கல்வி உதவிக்கான தளம் அறம்....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தோழர் நளினா அவர்களின் நினைவூட்டலுக்கு நன்றி.எப்படி இது விட்டு போயிற்று என தெரியவில்லை.

      நீக்கு
  7. போற்றுதலுக்கு உரிய மனிதர்
    இவருடைய பல நூல்களைப் படித்திருக்கிறேன்
    பாதுகாப்பாய் வைத்திருக்கிறேன்
    நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் தொடர்ந்த ஆதரவு மிகுந்த மகிழ்சியை அளிக்கிறது நண்பரே

      நீக்கு
  8. ஆம் உண்மைதான் நாங்கள் தோழருக்கு வைத்திருக்கும் பெயர் நடமாடும் கூகுள்.
    ஆனால் அது கூட தவறுதான்.அதையும் விஞ்சி நிற்பவர்.
    தங்களின் எழுத்துக்கள் அதை வெளிபடுத்துகிறது.
    தங்களின் எழுதும் நடை அனைவரும் எளிதாக படிக்கும் படித்து புரிந்து கொள்ளும்படி அமைந்துள்ளது.
    இன்னும் உங்கள் எழுத்து பனி தொடரவும் அதன்மூலம் நிறைய உண்மைகள் வெளியுலகுக்கு தெரியவும் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களை போன்றோரின் கருத்துக்களும் ஆதரவும் ஊக்கத்தை கொடுக்கின்றன.
      நன்றிகள் பல உங்களுக்கு

      நீக்கு
  9. மிகச்சிறப்பான பதிவு தோழர், உண்மையை உள்ளபடியே சொல்லியமைக்கு.நமது ஆசான் திரு.உமர் அவர்களிடம் இன்னும் பல சிறப்புகள் உள்ளன. அவரின் வழிகாட்டுதலில் நானும் ஒருவனாய் இருப்பதற்கு மகிழ்கின்றேன்.

    பதிலளிநீக்கு
  10. இந்த கருத்து ஆசிரியரால் அகற்றப்பட்டது.

    பதிலளிநீக்கு
  11. ஆயிரக்கணக்கான நபர்களின் இயல்புகளையும், திறமைகளையும் அவர்களுக்கே அறிமுகம் செய்யும் மானுடனுக்கு அறிமுகம் என்றாலும் சிறப்பாக உள்ளது.

    அரிது அரிது மானுடனாய் பிறப்பதரிது.
    இதனை திறம்பட உணர்ந்த மானுடன் இவர், தம் செயல்களால் அருகிலிப்போரையும் மனிதனாக்கும் மனிதம் இவர்.

    பதிலளிநீக்கு
  12. போற்றுதலுக்குரிய மனிதரைப் பற்றிய அரிய தகவல்களைப் பகிர்ந்து கொண்டமைக்கு பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களை போன்ற பெரியோர் வருகைக்கும் ஊக்கத்திற்கும் என்றென்றும் நன்றி ஐயா

      நீக்கு
  13. என் மனதில் இருக்கின்ற கருத்துக்களை எழுத்துக்களாக பகிர்ந்தமைக்கு நன்றி சார். நம் ஆசானுடன் ஒருசில இடங்களில் என்பயணமும் தொடர்ந்து கொண்டிடிருப்பதில் மகிழ்ச்சியே. இவர் தன் ஆராய்ச்சியால் இன்னும் பல உண்மைகளை உலகிற்கு கொண்டு வர ஒரு மாணவனின் வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  14. வாழ்த்துக்கள் தோழர்,
    எங்கள் ஆசானின் சிறப்புகளை எழுத்துக்களாக பதிவிட்டமைக்கு நன்றி.

    அவர் ஒரு Encyclopedia !!

    அவரது நற்செயல்களால் பயனடைந்தவர்களில் ஒருவராக பெருமிதம் கொள்கிறோம்.

    பதிலளிநீக்கு
  15. உங்கள் எழுத்துக்கள் நிதர்சனம்.
    பன்முக தன்மை ெகாண்ட எங்கள்
    ஆசான் வரலாற்றில் மிக ஆர்வமுள்ளவர்.
    அவர் நடமாடும் பல்களைகழகம் என்பதே
    உண்மை.எல்லாருக்கும் எல்லா சூழலிலும்
    பதிலலிக்க வல்லவர். எவ்வளவு பிஸியானாலும் அவர்முகத்தில் நிதானமும்
    புன்முறுவலும் பார்க்கலாம்.பழக எளிமையானவர்.இன்னும் நிறைய...........எ்ங்களையும் அவருடன்
    பயனிக்கவைத்த இயகைக்கு நன்றி. இன்றும் நிறைய.........
    நீங்கள் எங்கள் ஆசானை பற்றி எழுதிய
    கட்டுரை சிறப்பு சார். நன்றியும் மகிழ்ச்சியும்.

    பதிலளிநீக்கு
  16. சிறப்பான பணி செய்துள்ளீர்கள்... ஒரு கணம் போஸ் சாரும் தோழர் உமரும் கண் முன்னே வந்து சென்றார்கள்... எங்களது உள்ளங்களில் இருந்தவற்றை வரி வடிவத்தில் கொடுத்துள்ளீர்கள். மிக்க நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களை போன்றோர்இன் கருத்து மிகுந்த ஊக்கம் அளிக்கிறது நண்பரே

      நீக்கு
  17. The words that you describe about our master Umar are very impressive.I always love to hear history.That's why Nature gives me an opportunity to travel with the greatest living history of Acupuncture and Literature.

    பதிலளிநீக்கு
  18. நம் மாணவர் ஒருவர் நம் ஆசானை பற்றி கட்டுரை எழுதி இருப்பது மிக சிறப்பு ... ஓவியம் பேசாது ஆனால் அதை பற்றி பிறர் பேசுவார்கள்... அனைவரின் மனதில் இருந்த கருத்துக்களை ஒன்று திரண்டி விட்டீர்கள் சார்... உங்களுக்கு எங்கள் மனமார்ந்த பாராட்டுக்கள் மற்றும் நன்றி..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக அழகாக ஓவியம் என்ற சொல்லை பயன்படுத்தியுள்ளீர்கள் .
      தங்கள் வருகைக்கும் பாராட்டிற்கும் மிக்க நன்றி நண்பரே

      நீக்கு
  19. நம் ஆசான் பற்றிய தங்களின் கருத்துக்கள் உண்மையே மிகையல்ல.

    பதிலளிநீக்கு
  20. சிறப்பு தோழர் உமர் தோழரை முழுமையாக உள்வாங்கியதின் வெளிப்பாடு இந்தப் பதிவில் கண்டேன்
    நான் இவரிடம் கற்றுக்கொண்டது புதிரின் புதையல்.நிறைய தெரியும் என்று சொல்வதைவிட நிறைய புரியவேண்டும் என்பதே.வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் நண்பரே.
      வெள்ளத்தனைய என்று தொடங்கும் குறளுக்கு இவரும் ஒரு சிறந்த உதாரணம்

      நீக்கு
  21. வணக்கம்

    உமர் சார்ரை பார்த்து நான் வியந்தது உண்டு. நீங்கள் சொல்வது போல ஒரு மனிதருக்கு எப்படி எல்லா விசயத்தை பற்றியும் up-to-date தகவல் இருக்கிறது என்று.எதை பற்றி கேட்டாலும் சொல்கிறார். இக்கட்டுரையில் என்னை மிகவும் கவர்ந்த வரிகள் உமர் சாரின் வெற்றிக்கு பின்னால் இருக்கும் இரகசியம் தான். இந்த பிரபஞ்சதிற்கு நன்றி கூறுகிறேன் இப்படி ஒரு ஆசிரியர் எனக்கு கிடைத்ததிற்கு.

    பதிலளிநீக்கு
  22. விந்தை மனிதர்கள் இவரது தொண்டு போற்றுதலுக்குறியது.

    பதிலளிநீக்கு
  23. எங்கள் தோழரின் பணிகளை பட்டியலில் அடக்கி விட முடியாது, தோய்வின்றி செயல்படும் தோழமையை பாரட்டிய விதம் அருமை , நன்றி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் பல

      நீக்கு
  24. கட்டுரையின் ஒவ்வொரு சொல்லும், அவரது மாணவர்களான எங்களின் உள்ளக் கிடக்கைகளே!

    எங்கள் அன்பு ஆசான் உமர் தோழரின் ஒப்பற்ற நற்பணிகள் தொடர, எல்லாம்வல்ல இறைவன் / இயற்கை அவருக்கு நீண்ட நல்ல ஆயுளை வழங்கி அருளட்டும்.

    பதிலளிநீக்கு
  25. சிறப்பான பதிவு, இப்படிப்பட்ட ஆசான்களிடத்தில் படிப்பது இறையருளே!

    பதிலளிநீக்கு
  26. The words that you describe about our master Umar are very impressive.I always love to hear history.That's why Nature gives me an opportunity to travel with the greatest living history of Acupuncture and Literature.

    பதிலளிநீக்கு
  27. Very short description of great man
    Need more such write ups about him

    பதிலளிநீக்கு