வியாழன், 28 டிசம்பர், 2023

சங்கு சுட்டாலும்

கடந்த 2023ம் ஆண்டு நவம்பர் மாதத்தின் ஒரு வெள்ளிக்கிழமை இரவில் தாம்பரம் பேருந்து நிலையம் அருகே இருக்கும் நடைமேம்பாலம் வழியாக தொடர்வண்டி நிலையம் சென்று கொண்டிருந்தேன்.

பழ வியாபாரிகள், குறிப்பாக வாழைப்பழம் விற்போர் நடை மேம்பாலத்தின் முகப்பில் நின்றபடி மிக கண்ணியமாக விற்பர்.

அன்றைய வியாபாரம் முடிந்து, மீதம் இருக்கும் பழத்தை கிடைக்கும் விலைக்கு விற்பதற்கு ஆயத்தமாகவே வருவார்கள்.

சுமார் 18-20 பூவன் பழங்கள் வெறும் 10-15 ரூபாய்க்கே கிடைக்கும்.

இருப்பினும் இரவு நேரத்தில் அங்கு வாங்குவோர் மிகவும் குறைவே என்பதை ஏக்கம் தோய்ந்த வியாபாரிகள் முகமே சொல்லும்.

அன்று 10 ரூபாய்க்கான பழங்களை வாங்கிய படியே, 20 ரூபாயை அவரிடம் நீட்டினேன்.

அதன் நோக்கம் சில்லறை இல்லை என்பது மட்டுமல்ல,அவ்வளவு பழங்களை கொடுக்கும் அவருக்கு என்னாலான பலன்களை கொடுக்கலாம் என்ற எண்ணத்திலும் தான்.

"சில்லறை இல்லாட்டி பரவாயில்லை, விடுங்க" என்றேன்.

அவரோ புன்னகைத்தபடி, "சில்லறை இல்லாட்டி என்ன சார் பழம் தான் நிறைய இருக்கே பிடிங்க" என்றபடி மேலும் ஒரு சீப்பு வாழைப்பழத்தை நீட்டவில்லை, மாறாக கையில் திணித்தார்.

ஏழை வியாபாரிக்கு உதவ நினைத்த நான்,அந்த நிலையிலும் அவரது நேர்மையையும், தன்மானத்தை மதித்து பழங்களை பெற்றுக் கொண்டு நடையைக் கட்டினேன்.

பின்னர் தான் என் மனதில் உறைத்தது, இவர் போன்றோருடன் புகைப்படம் எடுக்கத் தவறியது.

நியாயமாக நடந்து கொள்ளும் வியாபாரிகளைப் பற்றிய மதிப்பு உயர்ந்த அதே நேரம், என்னுள் ஊழல்வாதிகளைப் பற்றி எண்ணம் எழாமல் இல்லை.

            "அட்டாலும் பால் சுவையிற் குன்றா தளவளாய்

            நட்டாலும் நண்பல்லார் நண்பல்லர்

            கெட்டாலும் மேன்மக்கள் மேன்மக்க ளேசங்கு

            சுட்டாலும் வெண்மை தரும்"


 

-       நன்றி அவ்வைப் பாட்டியார்


10 கருத்துகள்:

  1. அன்பு தம்பி குமார், மிகவும் சிறப்பான ஒரு நிகழ்வை அருமையாக பதிவு செய்து நெகிழ்ச்சியை ஏற்படுத்தி விட்டீர்கள். ஏமாற்றுபவர்கள் தாங்கள் ஆயிரம் ஆண்டுகளுக்கு வாழப் போகிறோம் என்று போலியாக நினைத்து தங்களின் தவற்றை செய்கிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தலைமை ஆசிரியரின் வருகைக்கு நன்றி. உண்மையிலேயே அந்த பழ வியாபாரி மிகவும் போற்றத் தகுந்த மனிதர் தான். ஏமாற்றுபவர்கள் பற்றி நீங்கள் சொன்னது நிஜமே.

      நீக்கு
  2. பதில்கள்
    1. ஆமாம் ஸ்ரீராம். என் மதிப்பில் நன்கு உயர்ந்து விட்டார்.

      நீக்கு
  3. நல்லதொரு நிகழ்வை சொல்லிய விதம் சிறப்பாக இருந்தது நண்பரே.....

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நள்ளிரவிலும் பிறர் பதிவுகளை படித்து ஊக்கம் அளிக்கும் கருத்துக்களை பதிவிடும் உங்களுக்கு நன்றி நண்பரே

      நீக்கு
  4. நல்மனதை அழகாக படம் வரைந்தது போல எழுதி மற்ற நல்ல நிகழ்வுகளையும் மனதில் வரவழைத்துள்ளீர்கள்.

    Thanks. Made my day here.

    பதிலளிநீக்கு
  5. மனதை ஈர்க்க கூடிய வகையில் நண்பர் பதிவிட்ட கருத்து அழகு. தங்களின் வருகைக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  6. பிளாக்கர் சிலரை வாழவைத்தது. இப்போது உங்களைப் போன்றோர் பிளாக்கரை வாழ வைக்கிறீர்கள். பாராட்டுக்கள். நல்லவர்கள் இந்த மாதிரி பல இடங்களில் உள்ளனர். ஆனால் அவர்களை நாம் மதிக்கத் தவறிவிடுகிறோம்.

    எனது பதிவு- https://newsigaram.blogspot.com/2024/01/02.html

    பதிலளிநீக்கு
  7. சிகரம் பாரதி அவர்களின் அழகான கருத்திற்கு நன்றி. தங்கள் பதிவையும் கண்டேன் , கருத்தும் பதிவிட்டேன். நல்ல பதிவு.

    பதிலளிநீக்கு