ஞாயிறு, 28 ஜனவரி, 2024

ஏன் என்ற கேள்வி

கருப்பும் ,வெள்ளையும் கூட நிறங்களுக்கும் அடக்கும் தானே, அப்புறம் கருப்பு-வெள்ளை படங்கள் / வண்ணப் படங்கள் என்று பிரிப்பதேன் ......

அறிவியல் அறியாமையா

தனது ஜாதியில் மட்டும் வரன் தேடும் ஓர் அரசு ஊழியர் , லஞ்சம் வாங்கும் போது ஜாதியை மறப்பதேன் ......

பணமே பிரதானமா

கண்கண்ட தெய்வமாகிய பெற்றோரை கண்டு கொள்ளாத மகன், ரசிகனாய் நடிகனின் “Cut Out”க்கு பால் ஊற்றுவதேன் ......

திரைப்படம் மோகம் தான் காரணமா

நாள்பட்ட நோய்களுக்கு நமது பாரம்பரிய மருத்துவமே சிறந்தது என்று அறிந்தும் ,ஆங்கில மருத்துவத்தை நாடுவதேன் ......

நமக்கு தெளிவு பிறக்க வேண்டுமா


என்ன தான் ஆங்கிலத்தில் புலமை பெற்றிருந்தாலும் , ஒரு மனிதன் “H” என்று மட்டுமே தும்முவதேன் ......

மற்ற எழுத்துக்களை மறந்து போவதாலா

செத்தால் தானே பிணம், பின்னர் செத்த பிணம் என்று சொல்வதேன் ......

தமிழ் தகராறா

கணிதம் என்பது எண்களைப் பற்றியது தானே, எண்கணிதம் என்று சொல்வதேன் ......

கணிதத்தை எண்ணிப் பார்க்க வேண்டும் என்பதாலா

எப்போதோ ஒரு முறை மட்டும் தொகுதிக்கு வரும் அரசியல்வாதிக்கு மீண்டும் மீண்டும் வாக்களிப்பதேன் ......

தனது வாக்கை விற்பதாலா

மரங்களை சாய்த்து நெடுஞ்சாலைகளை அமைப்பதேன் ......

விரைவாக சென்று விட வேண்டும் என்பதாலா 

ஆங்கிலத்திலும் தமிழும் ஒரே பொருள் தானே, அப்புறம் கிரிக்கெட்டில் “Catch”  பிடி என்று சொல்வதேன் ......

மொழிப் பிரச்சினையா

விபரீதம் ஏற்படும் போது ஐயோ என்று தானே கத்துகிறோம், அப்புறம் “குய்யோ முய்யோ” என்று கதாசிரியர்கள் வர்ணிப்பதேன் ......

கற்பனை சுதந்திரமா

வாழ்வே மாயம் என்று தெரிந்தும், மெய் என மேனியை சொல்வதேன் ......

கவிஞர் வாலிக்கு நன்றி சொல்லத் தானா

அரசு பள்ளிகளில் குழந்தையை சேர்க்க மறுக்கும் மனிதன், அரசு கல்லூரிகளை கண்டு தயங்குவது இல்லையே ஏன் ......

இங்கு மட்டும் தரம் கூடி விடுவதாலா

ஏன் என்று கேள்விகள் மேலும் தோன்றவில்லையே ஏன் ......

..............................

15 கருத்துகள்:

  1. very nice da.. we should ask these questions ( why ) ourself to be better in future and build a better world for our next generations

    பதிலளிநீக்கு
  2. பதிலும், பிறகு கேள்வியுமாக கட்டுரை சிறப்பாக இருக்கிறது நண்பரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தேர்ந்த எழுத்தாளார் என்பதை நிரூபிக்கும் வகையில் மிகச் சரியாக சொன்னீர்கள் நண்பரே. இதனை உங்கள் பாணியிலேயே தான் எழுத விரும்பினேன். கருத்திற்கு நன்றி.

      நீக்கு
    2. வணக்கம் நண்பரே இது எனது பாணி போன்றே இருந்தது.

      ஆனால் நான் சொல்வது முறையல்ல! நீங்களே சொல்லி விட்டீர்கள்.

      நீக்கு
  3. அருமையான பதிவு சார்,
    ஒவ்வோருவருக்குள்ளும் இதுபோன்ற நீளும் கேள்விகளுக்கு தங்களுடைய கட்டுரை தக்க துணையாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கந்தர்வக்கோட்டை கவிஞரின் ஊக்கம் தரும் கருத்திற்கு நன்றி.

      நீக்கு
  4. ஏன் ஏன் என மனதை எண்ணத் தூண்டுகிறது.
    அருமை.பாராட்டுகள்.

    பதிலளிநீக்கு
  5. மேலே உள்ளது மகாலிங்கம்

    பதிலளிநீக்கு
  6. இரா சந்திரசேகரன்28 ஜனவரி, 2024 அன்று PM 10:13

    ஏன் என்ற இரண்டு எழுத்துக் கேள்வி தான் மனித வாழ்க்கையின் மேம்பாட்டுக்கு முக்கியமானது....
    நல்லதொரு பதிவு....வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இரவு நேரத்திலும் படித்து விட்டு கருத்தை பதிவிடும் ஐயாவிற்கு நன்றி.

      நீக்கு
  7. கில்லர்ஜி பாணியில் கேள்விகளும் பதில்களும். சிறப்பு. பாராட்டுகள் நண்பரே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் வெ. நா அவர்களே. அவரை காப்பி அடித்து தான் எழுதினேன். வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      நீக்கு