பல
மேற்கத்திய நாடுகள் இரட்டை குடியுரிமையை எளிதாக வழங்குகின்றன.
நம்
தேசமோ அவ்வாறு இல்லை.
ஒரே
குடியுரிமை தான் தருகிறது.
ஆனால்
போர் தந்திரம் , வாட்போர் , உயிரிழப்பு என எதுவுமின்றி ,
ஐரோப்பா
கண்டத்தில் ஒரு தீவு 6 மாதங்களுக்கு ஒரு முறை தனது தேசத்தை மாற்றிக் கொண்டிருக்கிறது.
கடந்த
350 ஆண்டுகளில் , சுமார் 700 முறைகளுக்கும் மேலாக இத்தீவு தனது தேசத்தை மாற்றியுள்ளது
என்பது சற்றே வியப்புக்குரிய விடயம் தான்.
கி.பி
1630களில் துவங்கி சுமார் 25 ஆண்டுகளுக்கும்
மேலாக பிரான்சு மற்றும் ஸ்பெயின் நாடுகளுக்கிடையே
நீடித்த போர் ஒரு முடிவிற்கு வந்தது.
பிரான்ஸ்
அரசர் 14ம் லூயிஸ்க்கும் , ஸ்பெயின் அரசர் 4ம் பிலிப்புக்கும் இடையே ,
கி.பி
7, நவம்பர் 1659ல் , பைரனீஸ் எனும் ஒரு மாறுபட்ட போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தானது.
அரசர்களின்
சந்திப்பு
அந்த
ஒப்பந்தம் போரை நிறுத்துவதற்கும் மட்டுமல்ல , கூட்டாட்சி செய்வதற்காகவும் தான்.
இதன்
படி ,
தீவின்
நிர்வாகம் பிப்ரவரி மாதம் முதல் ஜூலை வரை ஸ்பெயின்
நாட்டிடமும் ,
ஆகஸ்ட்
முதல் ஜனவரி வரை பிரான்ஸ் நாட்டிடமும் என மாறி
மாறி இருக்கும்.
தீவு
- ஸ்பெயின் ஆற்றங்கரையிலிருந்து
32000
சதுர அடிகளை மட்டுமே கொண்ட ஃபெசன்ட். எனும் இத்தீவு , இரு
நாடுகளுக்கிடையே
ஓடும் பிடாஸோ என்ற ஆற்றின் நடுவில் அமைந்துள்ளது.
இந்த
வரலாற்று புகழ் பெற்ற தீவிலே தான் போர் கைதிகள் பரிமாற்ற நிகழ்வு மட்டுமல்ல , அரச திருமணங்களும்
நடந்தேறியுள்ளன.
பார்வையாளர்களுக்கு வருடத்தின் ஒரு சில நாட்களிலே மட்டும் தான் தற்போது அனுமதி உண்டு.
ஒரு
பிராந்தியத்தை கூட்டாக ஒன்றுக்கும் மேற்பட்ட நாடுகள் ஆட்சி செய்வது புதிது அல்ல.
இருப்பினும்
இத்தனை வருடங்களுக்கு கடந்தும் வெற்றிகரமாக நடைமுறையில் உள்ள ஒரே கூட்டாட்சி என்பது இங்கு தான்.
கூட்டாட்சிக்கு
அண்டார்டிகா கண்டம் மற்றொரு உதாரணம் , ஆனால் மனிதன் வாழ்வதில்லை என்பதே வேறுபாடு.
தேசத்திற்கு பெருமை சேர்த்த மா மன்னர்களை காட்டிலும், தம்மை கொள்ளை அடித்தவனையும், கொடுங்கோல் ஆட்சி புரிந்தவனை
பற்றியும் அதிகம் மாணாக்களுக்கு பயிற்றுவிக்கும் ஓர் அரசாங்கத்தை விட ,
எப்பொழுதோ புனையப்பட்ட
ஒப்பந்தத்திற்கு உரிய மரியாதை அளித்து அதனை இன்றும் நடைமுறை படுத்தும் இரு தேசங்களின்
செயலானது நிச்சயம் போற்றுதலுக்குரியது.
ஆச்சர்யமான தகவல் நண்பரே...
பதிலளிநீக்குஇந்த ஒற்றுமையுணர்வு இன்னும் பல மாமாங்கங்கள் நீடித்து நிலவட்டும்.
தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே. நிச்சயம் நீடித்திருக்கும் என்று நம்புகிறேன்.
நீக்குOh!!!
பதிலளிநீக்குReally very interesting and new information, thank you sir.
நன்றி நண்பரே
நீக்குஇக்கால அரசியல் சூழலிலும்கூட இவ்வாறான நிகழ்வு நடக்கிறது என்பது வியப்பேதான்.
பதிலளிநீக்குஐரோப்பா கண்டத்தில் பல நாடுகள் இருப்பினும் அவை அனைத்தும் கிட்ட தட்ட ஒரே நாடாகவே செயல் படுகின்றன. எனவே இது மேலும் பற்பல ஆண்டுகள் நடக்கும் என்றே நம்புகிறேன். முனைவர் அவர்களின் வருகைக்கு நன்றி.
நீக்குஉண்மை தான் shafi . படிக்கும் போது வியப்பே மேலிட்டது .
பதிலளிநீக்குநல்லதொரு தகவல் ஐயா...
பதிலளிநீக்குநன்றி...
தங்கள் வருகைக்கு நன்றி நண்பரே
நீக்குபடிக்கப் படிக்க வியப்பாக இருக்கிறது நண்பரே
பதிலளிநீக்குதங்களின் செய்தித் தேடல் போற்றதலுக்கு உரியது
இதன் மூல காரணம் நீங்கள் தானே ஐயா.
நீக்குஇந்த செய்தி எனக்கு புதிது வியப்பும் கூட. தகவலுக்கு நன்றி குமார்.
பதிலளிநீக்குமுனைவர் ஐயா அவர்களின் வருகைக்கு நன்றி.
நீக்குபுதிய தகவல்
பதிலளிநீக்குமிக்க நன்றி
நீக்குநல்ல தகவல் வியப்பாகவும் விறுவிறுப்பாகவும் இரூந்தது
பதிலளிநீக்குநல்ல தகவல் வியப்பாகவும் விறுவிறுப்பாகவும் இருந்தது
பதிலளிநீக்குவருகைக்கு நன்றி டா சரவணகுமார்
பதிலளிநீக்குநல்லதுடா
நீக்கு