வியாழன், 20 ஜூன், 2019

பொன்னியின் செல்வன்

தமிழில் வெளி வந்த புகழ் பெற்ற புதினங்களை திரை படங்களாய் எடுக்க, மேற்கொள்ளப் பட்ட முயற்சிகள் ஒரு சில மட்டுமே வெற்றி பெற்றுள்ளன.



கொத்தமங்கலம் சுப்பு அவர்கள் எழுதிய தில்லானா மோகனாம்பாள் , சுஜாதா அவர்களின் பிரியா ஆகியவை இதில் அடக்கம் என்பது நம்மில் பலருக்கு நிச்சயம் தெரிந்திருக்கும்.
தில்லானா மோகனாம்பாள் தொடர் நிறைவு பெற்ற போது ,
நாயகன் ,நாயகியின் திருமணத்தை வாழ்த்தி வாசகர்கள் ஏராளமானோர் ஆனந்த விகடனுக்கு தந்தி அனுப்பினார்கள் என ,
அக்கதையின் தாக்கத்தை இன்றும் சிலாகித்து சொல்லிக் கொண்டிருப்பார் என் தந்தை.

இருப்பினும், அதற்கும் மேலான தாக்கத்தை பொன்னியின் செல்வன் புதினம் நம்மிடையே இன்றும் ஏற்படுத்துகிறது என்பதில் மாற்று கருத்து இருக்க முடியாது.
மோக முள் கதையில் தி.ஜானகிராமன் அவர்கள் நம்மை 1940களின் குடந்தைக்கே நம்மை இட்டு செல்வதை போலவே ,
ஆடி திருநாளில் துவங்கி வீராணம் ஏரிக்கே இட்டு செல்வதிலும் சரி , குந்தவையுடனும் வந்தியத்தேவனுடனும் ஓடத்தில் நம்மை பயணம் செய்ய வைப்பதிலும் கல்கி அவர்கள் வெற்றி பெறுகிறார்.
மிக அதிக கதா பாத்திரங்களும் , அளவுக்கு அதிகமாக புகுத்தப்பட்ட 
பா மாலைகளும் கதையின் ஓட்டத்தினை சற்றே மட்டுப் படுத்துவதாக நான் கருதுகிறேன்.
இந்த புதினத்தை திரைப்படமாக எடுக்க மேற்கொள்ள பட்ட முயற்சிகள் யாவும் ,
இன்று வரை வெறும் ஏட்டளவில் மட்டுமே உள்ளன என்பதே
கல்கி அவர்களின் பெருமையை இன்றும் பறை சாற்றிக் கொண்டிருக்கிறது.

திரையிலும்,அரசியலிலும் வெற்றியை மட்டுமே சுவைத்து வந்த MGR அவர்கள் கூட முயற்சித்து பின்னர் கைவிட்டதாகவும் கேள்வி.

ஆயினும் ஒரு வேளை அனைத்தும் கைகூடி வந்து இத்திரைப்படம் தயாரிக்கப்பட்டால், 
யார் யார் எந்த பாத்திரத்திற்கு அழகாக பொருந்துவார் என்று யோசித்தேன்.
இந்த நடிகர் வயது என்ன, இவருக்கு அவர் பொருத்தமா, இப்போது உயிரோடு இருக்கிறாரா போன்ற வினாக்களுக்கு என்னிடம் விடை இல்லை.

பாத்திர தேர்வு என்பது , கல்கி அவர்கள் விவரித்த படியும் , மணியம் அவர்கள் வரைந்த ஓவியத்திற்கு கிட்ட தட்ட பொருந்தும்படியும் அமைவதும்,
யார் இதனை திரையில் அழகாக செய்ய கூடும் என்பதே.

இயக்குனராக இமயங்களும் , சிகரங்களும் மேலும் பிரும்மாண்டமானவர்களும் எண்ணத்தில் வந்து மோதினாலும் ,
இதற்கு பொருத்தமானவர் திரு. A. P நாகராஜன் அவர்களே என்பதில் ஐயமில்லை.
K.பாக்கியராஜ் அவர்களின் திரைகதைக்கு  பொருத்தமான இசை அமைப்பாளர் K.V மஹாதேவன் அவர்கள் தான்.


ரவி தாசனாக - இணையற்ற நடிகர் பாலையா
   


தேவராளனாக – நடிகவேள் M.R. ராதா
                       
இடும்பன்காரியாக  – அசோகன்
   

நந்தினியாக   - அலட்சிய நடிகை பானுமதி
 
நாகை புத்த பிக்குவாக  -  சத்தியராஜ்



குடந்தை ஜோதிடராக -  தேங்காய் ஸ்ரீனிவாசன்
பினாகபாணியாக –  டணால் தங்கவேலு         
   
தியாக விடங்கராக – VK ராமசாமி


ஈசான சிவபட்டராக  – சுப்பையா
                               
படகோட்டி முருகையானாக - வடிவேலு
        
                    



பார்த்திபேந்திர பல்லவனாக - பார்த்திபன்   
 

அன்பில் அநிருத்த பிரம்மராயராக – T.R மகாலிங்கம்


கந்தமாரனாக - நகைச்சுவை சக்ரவர்த்தி நாகேஷ்


மணிமேகலையாக -  நடிகையர் திலகம் சாவித்ரி


சாந்தமான சேந்தன் அமுதனாக

 


அழகிய மதுராந்தகராக - அரவிந்தசாமி



செம்பியன் மாதேவியாக -கண்ணாம்பாள்
 

சுந்தர சோழனாக - நடிகர் திலகம் சிவாஜி


வானவன் மாதேவியாக  - நாட்டிய பேரொளி பத்மினி
 
ஆதித்த கரிகாலனாக - இளைய திலகம் பிரபு
     

ஊமை பெண்ணாக - ஆச்சி மனோரமா
   

புத்திசாலித்தனம் நிறைந்த குந்தவையாக - ரேவதி

                                      
அப்பாவி பெண் வானதியாக - மீனா
  
பித்துக்குளித்தனம் நிரம்பிய பூங்குழலி கதா பாத்திரத்திற்கு - ஊர்வசி   
பெரிய பழுவேட்டரையராக - நம்பியார்


சிறிய பழுவேட்டரையராக  - நாசர்  




ஆழ்வார்கடியானாக - நகைச்சுவை மன்னன் விவேக்


அருள்மொழிவர்மனாக - நவரச நாயகன் கார்த்திக்


வந்தியத்தேவனாக கமல் ஹாசன்



மருதநாயகத்தை கைவிடும் முன்னரே ,
கமல் 80களின் இறுதியில் கல்கிக்கு அளித்த பேட்டியுடன் இந்த திட்டத்தையும் ஏட்டளவில் நிறுத்திக்கொண்டார் போலும்.



ஒரு வேளை இத்திட்டத்தை இவர் நிறைவேற்றி இருந்தால் , 
பொன்னியின் செல்வன் இந்திய திரைப்பட வரலாற்றில் ஒரு மைல் கல்லாக அமைந்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

20 கருத்துகள்:

  1. இப்பாத்திரங்களுக்கான கூத்தாடிகளை மிகச்சரியாக கணித்த தங்களது கற்பனைக்கு எனது வணக்கம் நண்பரே...

    பழுவேட்டையார் தேர்வு மிகச்சரியே...

    எல்லாம் சரிதான் இது திரைப்பமாக்கினால் இதை தயாரிக்கும் நிலையில் இருப்பது இன்றைய நிலையில் "லைக்கா நிறுவனம்" மட்டுமே...

    காரணம் படம் வெற்றி பெறாமல் போனாலும் குடும்பத்தார்கள் அரசியலில் சம்பாரித்து விடுவார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வழக்கம் போல் முதல் நபராக வருகை புரிந்து கருத்துக்கள் இட்டு ஊக்குவிக்கும் தங்களுக்கு வணக்கமும் நன்றியும் நண்பரே.
      தங்கள் கருத்துக்களை அப்படியே ஏற்றுக்கொள்கிறேன்.

      நீக்கு
  2. தங்களுடையது வித்தியாசமான தேர்வு...
    சிறப்பு...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முஹம்மது அவர்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      நீக்கு
  3. நிறைய யோசித்து இருக்குறீர்கள். பழுவேட்டரையரர்கள் பெயர் மட்டும் எனக்கு இன்னும் நினைவில் இருக்கிறது ஏறத்தாழ 30 வருடங்கள் ஆகியும்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நன்றி ஷபி அவர்களே. இன்னும் ஒரு முறை படியுங்கள் என்பதே எனது வேண்டுகோள்

      நீக்கு
  4. அருமை...இயக்குனர் மணிரத்தினம் பொன்னியின் செல்வன் எடுப்பதற்கான முயற்சிகள் நடைபெறுவதாக செய்திகள் வருகிறது...பொறுத்திருந்து பார்ப்போம்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ராஜேஷின் வருகைக்கு நன்றி. பொறுத்திருந்து பார்ப்போம்

      நீக்கு
  5. என்னதான் திரைப்படம் எடுத்தாலும், பொன்னியின் செல்வனில் மூழ்கி ஆழ்ந்து எழுந்த ரசிகர்களுக்கு அது அவ்வளவு பெரியதாக இருக்காது என்பதே என் எண்ணம்.

    பதிலளிநீக்கு
  6. முனைவர் அவர்களின் கருத்து ஏற்புடையதே. இருப்பினும் திரையில் தோன்றும் பிம்பம் வாசகர்களின் மனக் கண்ணில் பதிந்த பிம்பத்தோடு ஒத்து போகிறதா என்று பார்க்க இது ஒரு முயற்சியே.

    பதிலளிநீக்கு
  7. மிக அலாதியான கற்பனை!

    கால வரிசையில் கொஞ்சம் கூடத் தொடர்பே இல்லாத பல நடிகர்களை நீங்கள் ஒரே படத்தில் நடிக்க வைக்க விரும்புகிறீர்கள். எஸ்.வி.சுப்பையா, பானுமதி, டி.ஆர்.மகாலிங்கம் முதலியோரும் வடிவேலு, சூர்யா, பார்த்திபன் போன்றோரும் ஒரே படத்தில் நடிப்பது என்பது கற்பனையில் வேண்டுமானால் இயலுமே ஒழிய நடைமுறையில் வாய்ப்பேயில்லை. ஆனால் முழுக்க முழுக்க உங்கள் பார்வையில் இந்தக் கதாபாத்திரங்களுக்கு யார் பொருந்துவார்கள் என்பதை மட்டுமே கருத்தில் கொண்டு இயலுமை பற்றிய கவலையே இன்றி, யார் என்ன சொல்வார்களோ என்பது பற்றி எந்த அக்கறையும் இன்றித் துணிச்சலாக இப்படி ஒரு பதிவை நீங்கள் இட்டிருக்கிறீர்கள். அதற்காகவே பூங்கொத்துக் கொடுத்து உங்களைப் பாராட்டலாம்.

    நீங்கள் நம்புவீர்களோ இல்லையோ! நான் ஏறத்தாழ பதின்மூன்று பதினான்கு வயதிலிருந்து அடிக்கடி மனதில் ஓட்டிப் பார்த்துக் கொண்டிருந்த கற்பனை இது. அதாவது பொன்னியின் செல்வனைப் படமாக எடுத்தால் எந்தெந்தக் கதாபாத்திரத்துக்கு யார் யார் பொருந்துவார்கள் என்பது. ஆனால் எனக்கும் இப்படி வெவ்வேறு காலக்கட்டத்தைச் சேர்ந்த கலைஞர்கள்தாம் அந்தக் கதாப்பாத்திரத்துக்குப் பொருந்துவதாய்த் தோன்றும். உங்களுடைய பல நடிகர் தேர்வுகளில் எனக்கு உடன்பாடு இல்லை என்றாலும் துணிச்சலாகவும் அந்தந்தக் கதாபாத்திரங்களின் படங்களோடு குறிப்பிட்ட நடிகர்களின் படங்களையும் பக்கத்திலேயே வைத்துக் காட்டி இந்தக் கற்பனையை இவ்வளவு அழகாகவும் வெளியிட்டதற்கே மீண்டும் மீண்டும் என் பாராட்டுக்களும் நன்றியும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களின் மனம் திறந்த நீண்ட கருத்திற்கு முதற்கண் எனது நன்றி.

      ஆங்கிலத்தில் "all time great" என்று சொல்வதை மனதில் கொண்டு தான் நான் , நான் என் ரசனைக்கும் அறிவுக்கும் ஏற்றவாறு நடிகர்களை தேர்வு செய்தேன்.
      உங்கள் நடிகர்களின் தேர்வு எனது தேர்வுடன் எத்தனை விழுக்காடு ஒத்து போகிறது என்பதை நீங்கள் கூறினால் , அதை அறிய ஆவலாக இருக்கிறேன்.

      மீண்டும் உங்கள் வருகைக்கு நன்றி .

      நீக்கு
  8. ஆகா
    தங்களின் கற்பனை ஓட்டமும் தேர்வும் அருமை நண்பரே
    எவ்வளவுதான் மெனக்கெட்டுத் திரைப்படம் எடுத்தாலும், பொன்னியின் செல்வன் நாவலைத் படிக்கும்போது கிடைக்கும் மன மகிழ்வைத் திரைப்படத்தால் வழங்கமுடியுமா என்பது சந்தேகமே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி நண்பரே. உங்கள் ஐயத்தின் மீது ஐயம் கொள்ள வேண்டாம்.அது உண்மையே

      நீக்கு
  9. மிகவும் அருமையான பதிப்பு குமார் ராஜசேகர். பாத்திரங்களை மிக அழகாக வடிவமைத்துள்ளீர். மனமார்ந்த பாராட்டுக்கள்

    பதிலளிநீக்கு
  10. தங்களின் மனம் திறந்த பாராட்டுக்கு நன்றி

    பதிலளிநீக்கு