வியாழன், 15 ஏப்ரல், 2021

ஈன்ற பொழுதின்

நாம் இருவருமே ஒரே ஊரில் பிறந்தோம் , ஒன்றாய் படித்தோம் பள்ளி இறுதி வரை.

நுழைவு தேர்வில் உனக்கு கிடைத்தது இந்திய தொழில் நுட்பக் கழகத்தில் (IIT) பொறியியல் படிப்பு.

எனது ஆர்வத்தினால் நான் தேர்ந்தெடுத்தது இந்திய ராணுவம்.

நீ பொறியியல் படிப்பை தொடர்ந்தாய்

நான் மிக கடினமான பயிற்சியை மேற்கொண்டேன்

உனக்கு வரையறுக்கப் பட்ட பணி நேரம்

எனக்கோ காலை 4 மணிக்கு துவங்கி மாலை 9 வரை , சில நேரங்களில் பணி நேரம் நீளவும் செய்யும்.

படிப்பை முடித்த உனக்கு பட்டமளிப்பு விழா.

பயிற்சிக்கு பின் பணியை மேற்கொண்ட எனக்கு வீர தழும்புகள்.

மிக பெரிய நிறுவனத்தில் வேலை உனக்கு.

எனக்கு மனம் நிறைவான நாட்டுப் பணி.

ஒவ்வொரு பண்டிகைக்கும் / நிகழ்சிக்கும் உனக்கு பெற்றோரை பார்க்கும் வாய்ப்பு கிட்டியது.

எனக்கோ தேசத்தை காக்கும் ஒவ்வொரு நாளும் தீபாவளி

பண்டிகைகளை நீ விளக்கேற்றியும், பொம்மை துப்பாக்கி வெடித்தும் உறவினர்களுடன் கொண்டாடி மகிழ்ந்தாய்.

நானோ பதுங்கு குழியில் இருந்தபடி நிஜ துப்பாக்கியுடன் தேசத்தின் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தேன்.

ஒவ்வொரு மாலையும் உன்னை வரவேற்க உனது மனைவி காத்திருந்தார்.

எனது மனைவியோ , ஒவ்வொரு நாளும் நான் உயிரோடு இருக்க வேண்டுமென பிரார்த்தனை செய்து கொண்டிருந்தார்.

பணி நிமித்தமாக நீ ஆல்ப்ஸ் மலை மீது பல முறை பறந்தாய் விமானத்தில்.

நானோ பயிற்சியின் ஒரு பகுதியாக மலையேற்றம் பழகிக் கொண்டிருந்தேன்.

நீ இல்லம் திரும்பிய போது , உன் மனைவியால் ஆனந்த கண்ணீரை கட்டுப்படுத்த இயலவில்லை.

உன்னை கட்டி அணைத்துக் கொண்டார், நீயும் ஆறுதல் கூறினாய்.

உனக்கு உறவினரின் மலர் மாலைகள்.

நான் இல்லம் திரும்பிய போது எனது மனைவியாலும் கண்ணீரை கட்டுப் படுத்த முடியவில்லை.

ஆனால் என் மனைவியால் ஆலிங்கனம் செய்ய இயலவில்லை.

எனக்கு மலர் வளையங்கள்.

காரணம் , நான் இருந்தது சவப் பெட்டியில் மார்பில் பாய்ந்த குண்டுகள் மட்டுமல்ல, உடன் வீர பதக்கங்களும்.

இந்த நீயும் நானும் இரு வேறு நபர்கள் அல்ல ,

1996 ம் பிறந்த கேப்டன் அஷுதோஷ் தனக்கு கிடைத்த பொறியியல் படிப்பை தேர்ந்தெடுக்காமல்,

நமது ராணுவத்தில் சேர்ந்தார் தேசப்பற்றின் காரணமாக.



சென்ற ஆண்டு நவம்பர் மாதம் பணியில் ஈடுபட்டிருந்த போது உயிர் துறந்தார், 24ம் அகவையிலேயே.

இந்த புண்ணிய தேசத்தில், பஞ்சமும் பட்டினியும் வராமல் இருப்பது பல நல்ல தொண்டு உள்ளங்களால், பிரார்த்தனைகள் / யாகங்களால் மட்டுமல்ல.

உன்னை போன்ற நல்ல ஆத்மாக்களும் முக்கிய காரணம்.

சென்று வா வீரனே. நீ என்றும் எங்கள் நினைவில் வீற்றிருப்பாய்.


ஈன்ற பொழுதின் பெரிதுவக்கும் ,

தன் மகனை (தேசத்திற்காக) மாண்டான் என கேட்ட தாய்.

நன்றி – இந்திய ராணுவம்.

20 கருத்துகள்:

  1. வணக்கம் நண்பரே தொடங்கும்போதே ஏதோவொரு உண்மை நிகழ்வாகத்தான் இருக்க முடியும் என்று நினைத்தேன்.

    நாட்டுக்கு மட்டுமல்ல உலகிலேயே உண்மையான நாயகர்கள் அந்தந்த நாட்டு இராணுவ வீரர்களே...

    இருப்பினும் பணி ஓய்வு பெற்று திரும்பிய வீரர்கள் வாசலில் நின்று வாட்சுமேன் வேலை செய்து நாதாரிகளுக்கெல்லாம் சல்யூட் செய்யும் இழிவான வாழ்க்கை பலருக்கும் உள்ளது வேதனையான விடயமே...

    கேப்டன் அஷுதோஷ் அவர்களின் ஆன்மாவுக்கு எமது இராயல் சல்யூட்.

    நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு ஒரு லட்சத்து அருபதாயிரம் சம்பளம், இத்யாதி... இத்யாதிகள்...

    நாட்டை காக்கும் வீரர்களுக்கு ???
    நெஞ்சில் துப்பாக்கி குண்டுதான் மிச்சம்.

    பதிலளிநீக்கு
  2. வணக்கம் நண்பரே.
    முதல் நபராய் கருத்து பதிவிட்ட உங்களுக்கு நன்றி. அவர்கள் நம் நாயகர்கள் என்பது உண்மையே.
    என்ன ஓய்வு பெற்ற பின் ஒரு சிலர் படும் அல்லலை நினைத்தால் மனம் பிசைகிறது

    பதிலளிநீக்கு
  3. சுயநலம் மிகுந்த சமூகத்தின் மத்தியில் நாட்டுக்காக உழைத்து உயிர் தாகம் செய்பவர்கள் நாம் நினைத்து பார்க்க கூட நமக்கு அவகாசம் இல்லை. அவர்களுக்கான இந்த பதிவு நெகிழ்வாக உள்ளது தோழர்

    பதிலளிநீக்கு
  4. நெகிழ்ச்சி. ராணுவ வீரர்கள் மீது நம் நாட்டினருக்கு இருக்கும் மதிப்பு குறைவு. நம் வீரர்கள் அடையும் இன்னல்கள் குறித்த அறிவே இங்கே பலருக்கு இல்லை என்பதே வேதனையான நிதர்சனம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி நண்பரே. அவர்கள் மீது இருக்கும் கூட வேண்டும்.., ஓய்வு வாழ்க்கை இனிமையாக இருக்க வேண்டும் என்பதே ஆசை

      நீக்கு
  5. தன்னலம் மட்டுமே நிரம்பிய மனிதர்கள் வாழும் மண்ணில் இராணுவ வீரரைப் பற்றியப் பதிவு நெகிழ்வு

    பதிலளிநீக்கு
  6. Anti social element"s sons and daughters must send to our country border.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஹாஹாஹா.
      நமது அரசு நல்லது செய்யும் என்ற நம்பிக்கையில்..........

      நீக்கு
  7. நிகழ்ந்த சம்பவம் நெகிழ்ந்த பதிவு.

    பதிலளிநீக்கு
  8. நிகழ்ந்த சம்பவம் நெகிழ்ந்த பதிவு.

    பதிலளிநீக்கு
  9. ஆனால் என் மனைவியால் ஆலிங்கனம் செய்ய இயலவில்லை.

    காரணம் , நான் இருந்தது சவப் பெட்டியில் மார்பில் பாய்ந்த குண்டுகள் மட்டுமல்ல, உடன் வீர பதக்கங்களும்.

    உணர்வு பூர்வமான வரிகள்.

    பதிலளிநீக்கு
  10. நண்பரின் வருகைக்கும் ஈடுபாட்டுடன் படித்து விட்டு கருத்து பகிர்ந்தமைக்கும் நன்றி

    பதிலளிநீக்கு