ஞாயிறு, 2 ஏப்ரல், 2023

உள்ளமுணர் மாயனுபவம்

ஆன்மீக குரு

ராமகிருஷ்ணருக்கும் விவேகனந்தருக்கும் இருந்த உறவினை பற்றி, 

Life of Swami Vivekananda என்ற நூலில் விவரிக்கப் பட்டிருக்கும் விதம் என்னை மென்மேலும் படிக்கத் தூண்டியது.

என்னை சுற்றி என்ன நடக்கிறது , எனது கடமைகள் என்ன என்பது பற்றி அனைத்தும் மறந்த நிலையில் அந்த புத்தகத்தை பலமுறைகள் படித்தேன்.

இதன் விளைவாக என்னுள் எழுந்தது அசூயை .

ஆம், விவேகானந்தருக்கு அமைந்ததைப் போல், எனக்கும் ஏன் நீங்கள் ஆசானாக இது வரை கிட்டவில்லை. 

காலை எழுந்தது முதல் இரவு படுக்கச் செல்லும் வரை நான் அவரை கேட்டுக் கொண்டிருந்தேன்.

நீரில் மூழ்கிக் கொண்டிருக்கும் ஒருவன் மூச்சுக் காற்றுக்காக துடிப்பதை போல் ,

பரமஹம்சர் என்னை சிஷ்யையாக  ஏற்றுக் கொள்ள வேண்டும் என்று அன்றாடம் மன்றாடினேன்.

இந்நிலையில் ஒரு நாள் கனவு.

கனவில் பரமஹம்சர் வந்தாரா , இந்த நூலின் ஆசிரியரை சிஷ்யையாக ஏற்றுக் கொண்டாரா. ..?

படித்தால் நாமும் ஆன்மீக குருவை தேடத் தான் செய்வோம்.

கனவுகள்

கனவுகள் ருசிகரமானவை ,அவை நமக்கு ஏன் வர வேண்டும்.

அது ஆழ்மனதில் புதைந்திருக்கும் எண்ணங்களின் வெளிப்பாடா அல்லது அன்றாட நிகழ்வுகளின் பிரதிபலிப்பா.

என்னை பொறுத்த வரையில் கனவுலகம் என்பது உண்மையானது.

வெகு நாட்களுக்கு முன்னர் என் கனாவில் நான் நுகர்ந்த நறுமணத்தை, உண்ட உணவின் சுவையை , உடுத்திய உடையின் நிறங்களை இன்றும் நான் நினைவு கூறிகிறேன்.

நேற்று நாம் கண்ட கனாக்கள் நினைவில் இல்லாத போது ,

பல ஆண்டுகளுக்கு முன் கண்ட அமானுஷ்ய கனவுகள் இன்றும் பசுமையாக உள்ளனவே , ஏன்.

சிக்மன்ட் ப்ராய்டு மட்டும் தானா என்ன, இந்த நூலாசிரியரும் ஆராய்ச்சி செய்கிறார்.

தாம் கண்ட அமானுஷ்யமான கனாக்களை பற்றியும் அதன் தொடர்ச்சியாக வாழ்வில் ஏற்பட்ட நல்ல நிகழ்வுகளையும் அழகாக விவரிக்கிறார்.

முற்பிறவி

ஒரு தேர்ந்த மனநல மருத்துவர் உதவியுடன் என்னை மனோவசியம் செய்து என் முற்பிறவியை ஆராய முற்பட்டேன்.

சுமார் ஒரு மணி நேர முயற்சிக்குப் பின்னரும் பெரிதான தாக்கத்தை நான் உணரவில்லை.

மனோவசியம் என்ற சொல் மிகைப் படுத்தப்பட்ட ஒன்றாக இருக்க வேண்டும் அல்லது என்னை மனோவசியம் செய்வது மிகவும் கடினமான செயலாக இருக்க வேண்டும் என்று என்னை நானே சமாதானம் செய்து கொண்டேன்.

முற்பிறவி பற்றிய சொற்பொழிவு நிகழ்ச்சிகளில் கலந்து கொண்ட போது த்ருப்தி ஜெயின் என்னும் பெண்மணியை சந்திக்க சேர்ந்தது.

மனோவசியம் என்பது அதை செய்பவரின் குரலில் கவனத்தை குவித்து , நமக்கு ஆழ் மனதில் தெரியும் உருவங்களையும் , கேட்கும் குரல்களையும் பின் தொடர்ந்தால் போதுமானது என்று விளக்கமளித்தார்.

எனது நீண்ட தயக்கத்தையும் மீறி என்னை மனோவசியம் செய்ய அவர் ஆயத்தமானார் .

அவர் வெற்றி அடைந்தாரா ..?

போன ஜென்மத்தில் நான் என்னவாக இருந்தேன்...?

நூலாசிரியர் தமது அழகான ஆங்கில நடையில் நம்மையும் வசீகரம் செய்கிறார்.

மயக்க நிலையும் விழிப்புணர்வும்

எனது 17ம் அகவை முதல் 40 வரை நான் இறைவனை பற்றிய அதிக விழிப்புணர்வு இல்லாத நிலையில் தான் இருந்தேன் என்று சொல்ல வேண்டும்.

இந்த காலகட்டத்தில் படிப்பு, தொழில் மற்றும் வாழ்க்கை ஆகியவற்றில் என்  கவனம் சென்றதால்

நான் இறைவனை கிட்டத் தட்ட மறந்தே போனேன்.

எனது உழைப்பின் காரணமாக பல்கலை கழகத்திலேயே முதல் மாணவியாய் படிப்பை முடித்தேன். 

முனைவர் பட்டமும் எளிதில் கைகூடி வந்தது.

இதற்கும் மேலாக இந்தியா குடியுரிமை பணிகளில் நான் தேர்ச்சி அடைந்ததும் எனது கடும் முயற்சிக்குப் பலனாக கருதினேன்.

கடவுளுக்கு நான் அப்போது நன்றி சொல்லவும் இல்லை ,

இதுவரை அடைந்த வெற்றிள் என்பது அவரது கருணை இன்றி வேறு இல்லை என்பதை நான் உணரவும் இல்லை.

இந்த நிலையில் ஜூன் மாதம் 1994 ம் ஆண்டில் ஒரு நாள் ,எனது மாமியார் அவர்களால் சரிவர பேசவோ உணவு உட்கொள்ளவோ இயலவில்லை.

நா வலப்புறமாக சுழன்று கொண்டது.

மருத்துவ அறிக்கையோ மூளையில் பாதிப்பு என்றது.

மருத்துவரும் அறுவை சிகிச்சை அவசியம் என்றார்.

அகவை 60 தாண்டிய மாமியாருக்கு அறுவை சிகிச்சை ஒத்து வருமா என்று நானும் என் கணவரும் குழப்ப நிலையில் இருந்தோம்.

மற்றொரு மருத்துவரிடமும் ஆலோசிப்பது என்ற முடிவுக்கு வந்தோம்.

அதற்கு முன்னர் நான் என்றும் இறைவனுக்கு இணையாக போற்றும் ஒரு மகானை தரிசிக்க விழைந்தேன்.

என் கணவரும் , மாமியாரும் உடன் வர ஆயத்தமானார்கள்.

யார் அந்த மகான் ,அவர் தரிசனம் கிட்டியதா என் மாமியாருக்கு அறுவை சிகிச்சை நடந்ததா இல்லையா...

படிப்பவர்களை மயக்க நிலைக்கு அழைத்துச் செல்கிறார் நூல் ஆசிரியர்.

அமானுஷ்ய தேடல்

நம்ப முடியாத வகையில் என் மாமியார் குணமான விதம், ஷிபேந்து லஹிரி மற்றும் காயத்ரி ஸ்வமிகளுடனான பட்டறிவு போன்றவை அமானுஷயத்தை பற்றி என்னுள் கேள்விகளை எழுப்பிக் கொண்டே இருந்தன.

எனது வேட்கையின் காரணமாகவே இவ்வித ஆராய்ச்சிக்கு நான் ஆயுத்தமாகி விட்டதாக  பிரபஞ்சம் நினைத்ததோ என்னவோ ,

ஒரு தத்துவவாதி, ஒரு நண்பர் ,வாழ்க்கை வழிகாட்டி என மூவரும் சேர்ந்த கலவையாக எனக்கு திருமதி. “R” அவர்களை பிரபஞ்சம் அனுப்பியது.

பிறரை கவரும் காந்தம் என்ற சொல்லே திருமதி.“R” அவர்களுக்கு பொருத்தமாக இருக்கும்.

ஏன் காந்தம் என்று விவரிக்கிறார் , அப்படி என்ன அமானுஷ்ய தேடலில் நூலாசிரியர் ஈடுபட்டார், தேடலில் வெற்றி அடைந்தாரா.

நூலை படிப்பவர்களையும் தேட வைக்கிறார்.


எனக்கு பொதுவாக ஆங்கில நூல்களை படிப்பதில் சிறிதும் ஈடுபாடு வந்ததில்லை.

ஆனால் மரியாதைக்குரிய நண்பர் திரு. வைத்தியலிங்கம் அவர்கள் ஒரு நூலை பரிந்துரை செய்தார். 

Close Encounters of the Mystical Kind

தலைப்பே மிகவும் கவர்ந்ததால் பக்கங்களை புரட்ட துவங்கிய நான் , 

அதீத ஆர்வத்தின் காரணமாக சுமார் 3 மணி நேரத்திலேயே முடித்து விட்டேன்.


நம்மை இருக்கை நுனியில் அமர வைத்திருக்கும் விறுவிறுப்பான திரைப்படம் போல்,

ஆன்மீக , அமானுஷ்ய விஷயங்களில் ஈடுபாடு கொண்டவர்கள் இந்நூலை படித்தால் நிச்சயம் அவர்களுக்கு விருந்தாக அமையும் என்பது என் கருத்து.

இப்படி ஒயிலான நடையில் இந்த நூலை எழுதியவர் ஓய்வு பெற்ற வருமான வரித்துறை ஆணையர் 

திருமதி. வனிதா வைத்தியலிங்கம் I.R.S அவர்கள்.

டெல்லியில் நடந்த நூல் வெளியீட்டு விழாவின் காணொளி

https://www.youtube.com/watch?v=NMScBI6X0v0

இந்த நூல் மட்டுமல்ல ஆசிரியரின் மற்றுமொரு நூலும் amazonல் கிடைக்கிறது.

நூலை படித்தவர்களின் வெளிப்படையான கருத்துகளும் வரவேற்கப் படுகின்றன.

விருப்பமுள்ளோருக்காக amazon kindleல். 

1. Close encounters of the Mystical Kind: Glimpses of Eternity--https://www.amazon.com/Close-Encounters-Mystical-Kind-Glimpses/dp/B0BYRDXB1R 

2. The War Within: Mindscapes-- https://www.amazon.com/War-Within-Dr-Vanitha-Vaidialingam/dp/1730869319/ref=tmm_pap_swatch_0?_encoding=UTF8&qid=1680359753&sr=1-1 

10 கருத்துகள்:

  1. அருமையான நூல் அறிமுகம் சகோ.

    பதிலளிநீக்கு
  2. சிறப்பு.தொடர்ந்து எழுதுங்கள்.

    பதிலளிநீக்கு
  3. விமர்சனம் சிறப்பாக இருக்கிறது நண்பரே

    ஆசிரியருக்கு வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இடைவிடாமல் ஒவ்வொரு பதிவிற்கும் நல்லபடியாக கருத்தினை அளித்து என் போன்ற கத்துக் குட்டிகளையும் எழுத தூண்டும் நண்பர் கில்லர்ஜி அவர்களுக்கு நன்றிகள் பல.

      நீக்கு