வியாழன், 11 அக்டோபர், 2018

இயற்கையின் திருவிளையாடல்

ஒரு சில வாரங்களுக்கு முன் தான் உச்ச நீதி மன்றம் ஓர் இன சேர்க்கை பற்றி தீர்ப்பு அளித்திருந்தது.
ஆனால் இதை முன்பே அறிந்தது போல டென்மார்க் நாட்டின் விலங்கியல் பூங்காவில் இரு ஆண் பென்குயின்கள் ஒன்றாய் வாழ்ந்து வருகின்றன .
அங்கு நடந்த ஆர்வம் கூட்டும் ஒரு நிகழ்வை உங்களுடன் பகிர்ந்து கொள்ள விழைகிறேன்.
மனித இனத்தில் மட்டுமல்ல , மற்ற இனத்திலும் கலப்பினம் உண்டு என்பதை பென்குயின்கள் நிரூபித்து உள்ளன.
ஓடென்ஸ் என்று ஒரு விலங்கியல் பூங்கா டென்மார்க் நாட்டில் உள்ளது, நகரத்தின் பெயரே தான் பூங்காவிற்கும்.
அனைத்து விலங்கினகளுக்கும் உள்ளது போல பென்குயின் இனத்திற்கும் தனி இடம் உள்ளது அப்பூங்காவில்.


கலப்படம் அங்கும் பரவி உள்ளதால் இரு ஆண் பென்குயின்கள் ஒன்றாய் சேர்ந்து குடும்பம் நடத்துகின்றன.
காலப் போக்கில் இவர்களுக்கே தெரிந்து விட்டது போலும் தம்மால் ஒரு பென்குவின் குஞ்சை ஈன்றெடுக்க இயலாது என்று.
பென்குவின் குஞ்சுக்காக ஏங்கவும் துவங்கின.
கடந்த செப்டம்பர் மாதம் 26  ம் தேதி . தாய் , தந்தையர் சகிதமாக பென்குவின் குஞ்சு ஒன்று உலா வருவதை கண்டன.
இவைகளுக்கு நல்ல நேரமோ என்னவோ தாய் கரையில் தன்னுடைய கணவனையும் குஞ்சினையும் கரையிலேயே விட்டு நீந்த சென்று விட்டது.
தந்தையோ பொறுப்பின்றி வீதி உலா வர தொடங்கினார்.
தக்க சமயம் இது தான் என்று காத்திருந்த இரு ஓரின சேர்க்கையாளர்களும் பென்குவின் குஞ்சினை தூக்கி சென்று விட்டன தம் இடத்திற்கு.
பொறுப்பற்ற தந்தை விபரீதத்தை உணராதிருக்கையில் கரை திரும்பிய தாயோ தன் குழந்தையை தேட துவங்கியது.
சேண்டி என்ற பூங்கா பாதுகாப்பாளர் இந்த கூர்ந்து கவனித்துக்கொண்டிருந்தார்.
மேற்கொண்டு நடக்கப்போவது கண்டு களிக்கும் நோக்கில் வாளா  இருந்தார், எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்காமல்.
பூங்கா பாதுகாவலர்களும் அடுத்த ஒரு நாள் வரை குஞ்சின் பெற்றோர் அதனை தேடவில்லை என்றால் அது தத்து எடுக்கப்பட்ட இடத்திலேயே விட்டு விடலாம் என்ற முடிவுக்கும் வந்தனர்.
மறுநாள் பெற்றோர் தேட துவங்கி , தங்கள் பென்குவின் குஞ்சு கடத்தி வைக்கப்பட்டிருந்த இடத்தை கண்டு பிடித்தும் விட்டனர்.

                                                 சண்டையின் போது
இரு குடும்பத்தினருக்கும் இடையே சண்டை நடந்தது சிறிது நேரமே. இறுதியில் பென்குவின் குஞ்சு உண்மையான பெற்றோரிடம் பூங்கா பாதுகாவலர்களால் ஒப்படைக்கப்பட இந்த விவகாரம் முடிவிற்கு வந்தது.
பாதுகாவலர்கள் அத்துடன் நிற்கவில்லை
வேறு ஒரு பென்குயினிடமிருந்து ஒரு முட்டையை எடுத்து இந்த ஆண் இணைக்கு கொடுக்க அவை இரண்டும் தற்போது அடை காத்து , குஞ்சு பொறிக்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.

இயற்கையின் திருவிளையாடல்களில் இதுவும் ஒன்றன்றி வேறென்ன .

12 கருத்துகள்:

 1. ஓரினச்சேர்க்கையால் இனப்பெருக்கம் நடைபெறாது.

  பதிலளிநீக்கு
 2. அது உண்மையே. ஆனால் முட்டையை( ஆணாக பென்குயினாக இருந்தாலும் சரி பெண் பென்குயினாக இருந்தாலும் சரி) அடை காத்தால் குஞ்சு பொறிக்கும் என நம்புகிறேன்.

  பதிலளிநீக்கு
 3. மாற்றம் என்பது மானிடருக்கு மட்டுமல்ல! விலங்கினத்துக்கும்தானோ...

  எல்லாம் உலக அழிவை நோக்கி செல்கிறது...

  பதிலளிநீக்கு
 4. நீங்கள் உலக்த்தை ஒரு குறுகிய காண்ணோட்டத்தில் காண்பதால் விளைந்தது.
  அண்டம் ஒரு மாபெரும் Feed back Control System . ஜனத்தொகை கூடும்போதெல்லாம் பேரிடர்கள் துரத்துகிறன. அதை மீறி சாலை விபத்துக்கள் ரயில் ஆகாயவிமானம் ஆகியவாற்றல் மராணங்கள். மனிதன் விடாமல் இவைகாளோடு போராடி ஓரளவு வெற்றியும் காண்கிறான். ஆகவே ஜனத் தொகையை கட்டுப்படுத்த வேறு வழிகள் என்ன? மலட்டுத் தன்மை. அதையும் விஞ்ஞானத்தின் உதவியோடு தோற்கடிக்கிறான் மனிதன், எனவே பெருகும் ஜனத்தொகைக்கு இயற்க்கையின் பதிலென்ன. ஓரினச் சேர்க்கை. ஜனத்திகை பெருக்கத்தைத் தடுக்க இயற்கையின் பதிலடி.

  read the few books on Spirituality from:
  Tamil.pratilipi.com/natarajan-nagarethinam

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களின் வருகைக்கும் பதிவுக்கும் நன்றி.
   நான் இங்கு சுவாரசியமான ஒரு நிகழ்வை பகிர்ந்து கொள்ள நினைத்தேனே தவிர வேறு எந்த ஒரு எண்ணத்திலும் இல்லை. இருப்பினும் தங்களின் அழகான விளக்கத்திற்கு நன்றி.
   நேரம் இருக்கும் போது உங்கள் நூல்களை படிக்கிறேன்.

   நீக்கு
 5. மனிதர்கள் மட்டுமல்ல, விலங்குகளும் பிள்ளைப் பாசத்திற்காக ஏங்குகின்றன என்பதை உணர்த்துகிறது தங்களின் பதிவு
  நன்றி நண்பரே

  பதிலளிநீக்கு
 6. உண்மை தான் நண்பரே.
  வருகைக்கு நன்றி

  பதிலளிநீக்கு