சனி, 10 ஏப்ரல், 2021

சொர்க்கமே என்றாலும்

பல வருடங்களுக்கு பிறகு சென்ற ஆண்டு தீபாவளியின் போது எனது சொந்த ஊரான தஞ்சையில் சுமார் ஒன்றரை மாதம் தங்கும் வாய்ப்பு கிட்டியது.

கரோனாவுக்கு நன்றி (கூறும் முதல் நானாக தான் இருப்பேனோ என்னவோ)

அவ்வப்போது நண்பர்கள் திரு.ஜெயகுமார் அவர்களையும் மற்றும் பள்ளி தலைமை ஆசிரியர் திரு. சரவணன் அவர்களையும் அடிக்கடி சந்தித்து உரையாடுவதுண்டு.

ஒரு நாள் இருவரிடமும் பேசிவிட்டு இல்லம் திரும்பும் போது தான் மனதில் அசை போட துவங்கினேன்.

என்ன தான் பிழைப்பு தேடி என்னை போன்ற நண்பர்கள் தேசங்கள் பல விஜயம் செய்திருக்கிறோம் என்று பெருமை பீற்றி கொண்டாலும் சரி ,

டாலரிலோ அல்லது பவுண்டிலோ ஊதியம் பெற்றாலும் சரி ,

IIT, IISC போன்ற பெரும் கல்வி நிறுவனங்களில் பயின்று அந்நிய தேசத்தில் நிரந்தரமாக குடி புகுந்தவர்களானாலும் சரி ,

அவர்கள் மன நிறைவு அடைந்து விட்டார்களா அல்லது மகிழ்ச்சியாக தான் இருக்கிறார்களா

(ஒரு சிலரை குறை சொல்ல இயலாது, இங்கிருக்கும் சாதி வெறியும் புரையோடிப்போன ஊழலுமே ஒரு சில காரணங்கள் என்பதை நாம் ஒப்புக்கொள்ள தான் வேண்டும்)

பணவாசம் சரிமனவாசம் இருக்குமா ..?

கூப்பிட்ட குரலுக்கு இங்கு உடனே வர இயலுமா ..?

நினைத்த மாத்திரத்தில் பள்ளி நண்பர்களுடன் ஒன்றாய் கூடி பழங்கதை பேசி மகிழ இயலுமா ..?

திருவிழாக்களிலும் , திருமணங்களிலும் சொந்த பந்தங்களை சந்தித்து மகிழ முடியுமா ..?

ஒன்று அல்லது இரண்டாண்டிற்கு ஒரு முறை சுமார் 15 நாட்கள் விடுப்பில் வரும் அவர்கள் எத்தனை பேரை சந்தித்து மகிழ இயலும் ..

(அதே சமயம் சுமார் 20 வருடங்களுக்கு முன்பே அமெரிக்க குடியுரிமையை, தந்தையரின் உடல் நலம் கருதி உதறி தள்ளிய நண்பன் சீனிவாசனையும், அமெரிக்க குடியுரிமை பெற்ற பின்பும்10 ஆண்டுகளுக்கு முன்பு பெற்றோருக்காக தாயகம் திரும்பி விட்ட நண்பன் இளங்கோவையும் இங்கு  நினைவு கூற விரும்புகிறேன்)

இவர்களை விட , பிறந்த ஊரில் தாம் படித்த பள்ளியிலேயே ஆசிரியப் பணி செய்து பல மாணவர்களின் இதயங்களில் என்றும் குடியிருக்கும் நண்பர்கள் ஜெயகுமார் மற்றும் சரவணன் போன்றோர்க்கு கிட்டிய பேறு சிறிதன்று.




கூப்பிட்ட குரலுக்கு வந்து நிற்கலாம்

வயதான பெற்றோருக்கு வேண்டிய நேரத்தில் பணிவிடை

தானா சேர்ந்த (மாணவர்) கூட்டம்

நிறைவான ஊதியம் , புண்ணிய தொழில் மற்றும் மகிழ்வான வாழ்க்கை

இதுக்குமேல வேறென்னங்க வேணும் ...................

ஊரு விட்டு ஊரு வந்து,

ராமராஜன் சும்மாவா பாடி இருக்கார்

"சொர்க்கமே என்றாலும் அது நம்மூரை போல வருமா "

37 கருத்துகள்:

  1. எமக்குக் கிட்டிய பேறு பெரும் பேறு
    உண்மை
    நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  2. என்ன தான் இருந்தாலும் யதார்த்தம் என்ற ஒன்றை ஏற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.

    பதிலளிநீக்கு
  3. என்ன தான் இருந்தாலும் யதார்த்தம் என்ற ஒன்றை ஏற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.

    பதிலளிநீக்கு
  4. என்ன தான் இருந்தாலும் யதார்த்தம் என்ற ஒன்றை ஏற்றுக் கொள்ள வேண்டியுள்ளது.

    பதிலளிநீக்கு
  5. நண்பர் திரு.ஜெயக்குமார் அவர்களின் கருத்தையே நானும் வழிமொழிகிறேன் நண்பரே. நன்றிகள் பல.

    பதிலளிநீக்கு
  6. ஆம் அயல் தேசத்தில் அதிக காலம் வாழ்ந்தவர்கள் இந்திய வாழ்க்கையோடு இசைந்து போவது கஷ்டமான காரியமாக இருக்கிறது என்பது(ம்) உண்மையே...

    ஒரே ஊரில் பிறந்து, வளர்ந்து,படித்து, அதே ஊரில் வேலையும் பார்த்துக் கொண்டு வாழும் கொடுப்பினை எல்லோருக்கும் வாய்ப்பதில்லை நண்பரே...

    பதிலளிநீக்கு
  7. Good subject.. happy life doesn't equate with materials what we posses. but glad next generations are slowly waking up on these and corona did a big help for people thought process to pause and think in the busy routine

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நம் ஊரைப்பற்றிய உன் பதிவும் படித்தபின் நம் ஊரிலேயே குடும்பத்தினரருடன் தங்கி வேலை பார்பது என்பதும் உண்மையிலேயே மகிழ்ச்சிதான். DDJ.

      நீக்கு
    2. தங்களின் வருகைக்கும் அழகான கருத்திற்கும் நன்றிகள் பல

      நீக்கு
  8. நண்பர்களைச் சந்தித்து, பகிர்ந்த விதம் அருமை. மகிழ்ச்சி. சொர்க்கமே என்றாலும்...என்ற உங்களின் வரிகளை முழுமையோடு ஏற்கிறேன். நான் பிறந்த ஊர் கும்பகோணம் என்ற நிலையில் கும்பகோணத்திற்குச் செல்லும்போதும், அங்கு நண்பர்களிடம் உரையாடும்போதும், பல கோயில்களுக்குச் செல்லும்போதும் கிடைக்கும் நிம்மதிக்கு ஈடு இணை எதுவுமே இல்லை. இதனை என் அனுபவத்தில் உணர்ந்துள்ளேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முனைவர் அவர்களின் இந்த கருத்து மென்மேலும் ஊக்குவிக்கிறது.
      தங்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி ஐயா

      நீக்கு
  9. சொர்க்கமே என்றாலும்... உண்மை தான். பல சமயங்களில் இதனை உணர்ந்திருக்கிறேன். இந்தியாவிலேயே இருந்தாலும், வெளி மாநிலத்தில் இருப்பதால், பல சமயங்களில் தமிழகம் வர இயலாமல் போக, “என்னடா வாழ்க்கை இது!” என்ற எண்ணம் வந்ததுண்டு.

    ஒரே ஊரில் பிறந்து, படித்து, அதே ஊரில் வேலையும் பார்ப்பது சிலருக்கு மட்டுமே வாய்க்கிறது. அந்த விதத்தில் அப்படியானவர்கள் அதிர்ஷ்டசாலிகளே!

    நல்ல பதிவு. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் வெங்கட் நாகராஜ் அவர்களை மீண்டும் காண்பதில் மிகவும் மகிழ்ச்சி.
      ஒரே கருத்தை நீங்களும் பிரதிபலிப்பது மன நிறைவை தருகிறது நண்பரே

      நீக்கு
  10. மகிழ்ச்சியை அளிக்கும் உங்களின் கருத்திற்கு நன்றி

    பதிலளிநீக்கு
  11. எளிமையான எழுத்து நடை. உண்மையின் உரைகல்.இந்த உணர்வு எனக்கும் உண்டு. என்னுடைய கல்லூரித்தோழன் அவனின் குழந்தைகள் இந்தியா திரும்ப மறுக்கிறார்கள் என்பது எவ்வளவு வருத்தமான விஷயம்.
    நானும் இந்த பாடல் வரிகளை உணர்ந்து அனுபவித்ததுண்டு.

    வாழ்த்துகள் தோழர்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதன் முதலாய் நண்பர் திரு. நாராயணன் அவர்களை காண்பதில் மகிழ்ச்சியும் கருத்திற்கு நன்றியும்

      நீக்கு
  12. சொந்த நாட்டிலேயே இருப்பவர்கள் கொடுத்து வைத்தவர்கள். வாழும்போதே சொர்கத்தில் இருப்பவர்கள் போல. வெளியில் உள்ளவர்கள் மறைந்த பிறகு சொர்க்கத்திற்கு செல்வதற்காக உழைப்பவர்கள் என்று கேள்விப்பட்டுள்ளேன்.இதைப் பதிவு செய்யும் போது நான் என் சொந்த ஊரில் இருக்கிறேன் என்பது கவனத்தில் கொள்ளுங்கள் :-). உங்களுடைய நெகிழ்வான பதிவிற்கு நன்றியும் வாழ்த்துகளும். "சொர்கமே என்றாலும்"
    அந்த அருமையான பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர் "கங்கை அமரன்" அவர்கள். ஆனால் இளையராஜாவும் ராமராஜனும் அந்த பாடலுக்கான பெருமையை பெறுகிறார்கள் என்பது வியப்பு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இந்த பதிவிற்கான கருத்தை உங்கள் சொந்த ஊரிலிருந்து அளிப்பது பொருத்தமே...

      அப்புறம் இப்பாடல் கங்கை அமரன் என்பது உங்கள் மூலமாக வந்த எனக்கு வந்த தகவல்.
      நன்றி

      நீக்கு
  13. பணவாசம் சரி. மனவாசம் இருக்குமா. நிதர்சனம் தோழர். சிறப்பான மையம். மனமார்ந்த வாழ்த்துகள் தோழர்

    பதிலளிநீக்கு
  14. அருமையான கதை. பாராட்டுகள்

    உடுவை.எஸ்.தில்லைநடராசா
    கொழும்பு-இலங்கை

    பதிலளிநீக்கு
  15. சிறப்பு..... மிகவும் எளிமையாக, தெளிவாக மண்டையில் ஆணி அடித்தார் போல் சொல்லி யிருக்கிறீர்கள். தங்கள் எழுத்துப் பணி தொடரட்டும்.

    பதிலளிநீக்கு
  16. தோழரின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  17. அற்புதமான பதிவு சார்,
    இலட்சிய எண்ணம் கொண்ட பலர் என்னைப் போ‌ன்று வாழ்வில் வெற்றிபெற வேண்டுமென நினைப்பவர்கள் கூட தான் வாழ்ந்த இன்பமான சூழலை விட்டுக் கொடுக்க மனம் இல்லாமல் அதனை இழந்து விடுகின்றனர் இது தான் உண்மை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நீங்கள் சொர்க்கத்தில் இருப்பதால் எதையும் இழக்கவில்லை சார் 😊😊

      நீக்கு