சனி, 18 ஜூலை, 2020

மானிடராய் பிறத்தல் அரிது , அதிலும் .......

ஸ்ரீகாந்த் –ஊக்கத்திற்கு மறு பெயர் என்றே இவரை நாம் கருதலாம்.

1991 ம் ஆண்டு மச்சிலிபட்டினம், ஆந்திராவில் பிறந்தவர்.

பள்ளி படிப்பில் மிகுந்த ஆர்வம் கொண்ட இவருக்கு அங்கு கிடைத்த வரவேற்பு மாறுபட்டது.

கடைசி இருக்கையில் அமர்த்தப்பட்டார்.

சக மாணவர்களுடன் விளையாட்டு நேரங்களில் சேர்த்துக் கொள்ளப்படவில்லை.

கரோனா காலத்திற்கு முன்பே இவர் தனிமை படுத்தப்பட்டார்.

இருப்பினும் தடைகளை தகர்த்தெறிந்து 10 ம் வகுப்பில் 90% பெற்றார்.

11ம் வகுப்பில் அறிவியல் பாடத்திற்காக விண்ணப்பித்திருந்த இவருக்கு இளங்கலை பாடத்தை மட்டுமே தேர்வு செய்ய இயலும் என்ற செய்தி இடியாய் இறங்கியது.

நீதிமன்ற உதவியை நாடினார்.

6 மாதங்களுக்கு பின் இவருக்கு சாதகமாக தீர்ப்பு வந்தது.

ஆயினும் ஒரு சில நடை முறை சிக்கல்களை கருத்திற் கொண்டு, படிப்பின் முழு பொறுப்பும் மாணவரை சார்ந்தது என்ற நிபந்தனையும் இடப்பட்டது.

ஏற்றார். 12 ம் வகுப்பில் இவர் பெற்றது 98%.

நாட்டின் பல்வேறு பொறியியல் கல்லூரிகளில் விண்ணப்பித்த இவருக்கு கல்லூரிகள் தந்த செய்தியானது அதிர்ச்சியை ஏற்படுத்தவில்லை ....

10ம் வகுப்பில் பெற்றிருந்த பட்டறிவே காரணம்.

தகுதியுள்ள மாணவர் உதாசீனப்படுத்தப் பட்டார்.

கல்லூரிகள் இவரை நுழைவு தேர்வை கூட எழுத அனுமதிக்கவில்லை.

மதியாதார் வாசலை மிதியாதே என்ற எண்ணத்தில் இவர் நம் நாட்டில் எந்த முயற்சியும் எடுக்கவில்லை.

நேரடியாக அமெரிக்காவில் விண்ணப்பித்தார்.

MIT (Massachusetts Institute of Technology) , Stanford , Berkeley மற்றும் Carnegie Mellon ஆகியவற்றில் இடம் கிடைத்தது.

உலகப் புகழ் பெற்ற MIT யில் பட்டம் பெற்றார்.

அமெரிக்க டாலரை விரும்பாமல் நம் மக்கள் மீது பாசம் கொண்டு பாரதம் திரும்பினார் ,

தம்மை போல இன்னலுறும் மாணவர்களின் வாழ்வில் ஒளியேற்ற உறுதி கொண்டார்.

2012 பொல்லன்ட் என்ற நிறுவனம் துவங்கப் பட்டது.

சுற்று சூழலுக்கு ஏற்றவாறு இருக்கும் பொருட்களான மண் குடுவைகள் , கோப்பைகள் போன்ற பொருட்களை தயாரிக்கிறது இந்நிறுவனம்.

தென்னிந்தியா முழுவதும் 5 உற்பத்தி அலகுகளை கொண்டிருக்கும் பொல்லன்டில் சுமார் 600 தொழிலாளர்கள் பணி புரிகிறார்கள்.

ஆண்டு வருமானம் 50 கோடி.

போதாதென்று 3000 மாணவர்களின் கல்விக்கு உதவுகிறார்.

அது சரி , இது போன்று பலர் நம் நாட்டில் உதவுகிறார்களே , படிப்பில் மிளிர்கிரார்களே ,

இவரிடம் என்ன அதிசயம் ..., இவர் எவ்வாறு வேறுபடுகிறார் என்ற கேள்வி நம்மில் நிச்சயம் எழும்.

ஆம் நண்பர்களே. இவர் வேறுபடத்தான் செய்கிறார்.

பெயரில் காந்தம் கொண்ட இவருக்கு இறைவன் கண்களில் காந்தத்தை அளிக்கவில்லை.


MITயின் முதல் (பார்வையற்ற) மாற்று திறனாளி என்று பெருமையை தாங்கி நிற்பவர்.



ஆங்கிலத்தில் ஒரு பழமொழி உண்டு – Blessing in disguiseஎன்று.

"கெட்ட நேரத்திலும் ஒரு நல்ல நேரம்" என்பது பொருள்.

பார்வையற்ற மனிதராய் பிறந்த நேரமோ என்னவோ , இன்று உலகமே வியந்து பார்க்கும் மா மனிதராய் இவர் உயர்ந்து நிற்கிறார்.


" தோன்றின் புகழொடு தோன்றுக அஃதிலார்
தோன்றலின் தோன்றாமை நன்று "



21 கருத்துகள்:

  1. நாட்டுப்பற்றுள்ள நல்ல இதயங்களுக்கு என்றுமே இந்தியாவில் கடைசி இடம்தான் தரப்படுகிறது.

    அரிய மாமனிதரைப் பற்றிய தகவல் தந்தமைக்கு நன்றி நண்பரே...

    இனி இவரை இந்தியா போற்றும் இதுதான் இந்தியர்களின் நிகழ்கால நிலைப்பாடு.

    விழியிருந்தும் குருடராய் இங்கு பலர் உண்டு. இறைவன் குறையை கொடுத்தாலும் வேறு நிறைவைத் தருகிறான் என்பது இறைநியதி.

    வாழ்க வளமுடன் ஸ்ரீகாந்த்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. முதல் நபராய் வந்து கருத்தளித்தமைக்கு நன்றி நண்பரே.
      நிச்சயம் இந்தியா இவரை இனி கொண்டாட தான் போகிறது.
      இங்கு திறமைக்கு மதிப்பேது

      நீக்கு
  2. அற்புதமான மனிதரைப் பற்றி அறிந்து கொள்ள முடிந்தது குமார். தங்களது பதிவு அருமை. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சகோதரர் சரவணன் அவர்களின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி.

      நீக்கு
  3. முயற்சி உடையார் இகழ்ச்சி அடையார்.

    பதிலளிநீக்கு
  4. வித்யாசமான மனிதரைப்பற்றிய விளக்கமான பதிவு குமார். பிரமாதம் வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. தங்களின் ஊக்கமிக்க கருத்திற்கு நன்றி ஐயா.

    பதிலளிநீக்கு
  6. முயன்றால் முடியாதது இல்லை என்பதற்கு இவர் ஓர் எடுத்துக்காட்டு.
    போற்றுவோம், வாழ்த்துவோம்

    பதிலளிநீக்கு
  7. முயற்சியும் தன்னம்பிக்கையும் என்றும் ஒருவரை முன்னுக்கு அழைத்துச்செல்லும். ஓர் அரிய மனிதரைப் பற்றிய பதிவு. சிறப்பு.

    பதிலளிநீக்கு
  8. நல்ல பயனுள்ள தகவல் குமார்.

    பதிலளிநீக்கு
  9. மு"உடையார் இகழ்ச்சி அடையார்" என்ற சொல்லிற்கேற்ப வாழ்ந்து காட்டிய திரு. ஸ்ரீகாந்த் அவர்கள் எல்லோருக்குமான வழிகாட்டி. இப்படிப்பட்ட அரிய மனிதர்களை பற்றிய வலைப்பின்னல் பதிவு அருமை தொடரட்டும் உங்கள் பணி.

    பதிலளிநீக்கு
  10. "முயற்சி உடையோர் இகழ்ச்சி அடையார்" என்ற சொல்லிற்கேற்ப வாழ்ந்து காட்டிய திரு. ஸ்ரீகாந்த் அவர்கள் எல்லோருக்குமான வழிகாட்டி. இப்படிப்பட்ட அரிய மனிதர்களை பற்றிய வலைப்பின்னல் பதிவு அருமை தொடரட்டும் உங்கள் பணி.

    பதிலளிநீக்கு