சனி, 4 ஜூலை, 2020

தமிழ் வேந்தர்களின் சாட்சி


சுமார் 17 அகவையே நிரம்பிய ஒரு மாணவருக்காக சுதந்திர போராட்டத்தில் ஈடுபட்ட மாபெரும் கவி ஒருவரும் , புகழ் பெற்றபெரும் தமிழ் அறிஞரும் நீதி மன்ற படியேறி சாட்சி சொன்னார்கள் என்றால் அது சாதாரண செய்தியா என்ன.

1958 – சுதந்திரத்தின் மறு பெயர் கொண்ட அன்றைய நாளிதழின் ஜனவரி மாத பதிப்பில் ஒரு மாணவர் இளந்தமிழா புறப்படு போருக்குஎன்ற பெயரில் கட்டுரை ஒன்றை எழுதியிருந்தார்.

பாரதத்தின் வேறு பகுதியிலிருந்து தமிழகம் குடி பெயர்ந்தவர்கள், அன்று நடத்தி வந்த அங்காடிகளையும் இன்ன பிற வணிகங்களையும் ஒட்டு மொத்தமாக புறக்கணிக்க ஓர் இயக்கத்தின் தலைவர் விடுத்திருந்த அழைப்பை வலியுறுத்தி அக்கட்டுரை வரையப் பட்டிருந்தது.

“கூலியாட்களாக நாம் நம்முடைய தாயகத்திலே அல்லல் படுகின்றோம் , ஆனால் பிழைப்பை நாடி வந்த கூட்டமோ இன்றைக்கு கும்மாளம் அடித்து கொண்டிருகிறது” என்று துவங்கியிருந்தார்.

இந்த பனியா ஆதிக்கத்தை ஒழிக்க தமிழர் திரண்டு வர வேண்டாமா 
– கூடவே ஓர் அரை கூவலும் கட்டுரையில் சேர்க்கப் பட்டிருந்தது.

பாரதிதாசன் பாடலும் , மு.வ அவர்களின் கருத்தும் மேற்கோளாய் அமைய பெற்றிருந்தன.

செய்தி அரசின் பார்வைக்கு செல்லாமல் இருக்குமா.

சென்றது.

குறிப்பிட்ட ஒரு சில சமூகத்தினருக்கு எதிரானது என்று முடிவு செய்த காவல் துறை நாளிதழின் ஆசிரியர் மூலம் இக்கட்டுரை எழுதிய இளைஞரை கைது செய்து நீதிமன்றத்தில் நிறுத்தியது.

உடன் அதன் ஆசிரியரும் நீதிமன்றத்தில் நிறுத்தப்பட்டார்.

இந்திய தண்டனை சட்டம் 153அ பிரிவின் கீழ் இருவர் மீதும் வழக்கு தொடரப்பட்டது.

ஆகஸ்ட் மாதம் 1958ல் வழக்கு விசாரணைக்கு வந்தது சென்னையில்.

முதலில் சாட்சி சொன்னவர் புகழ் பெற்ற பெருங்கவி.

"இம்மாதிரி பாடல்கள் விரோத மனப்பான்மையுடன் எழுதப்படவில்லை என்றும் அமைதியை வளர்ப்பதே நோக்கம்"
என்றும் அவர் அந்த மாணவருக்கு ஆதரவாக நீதி மன்றத்தில் தமது கருத்தை கூறினார்.

அடுத்து சாட்சிக்கு அழைக்கப் பட்டவர் கல்லுரி பேராசிரியராக பணி புரிந்து வந்த தமிழறிஞர்.

"கட்டுரையில் எந்த ஓர் எதிர்மறை கருத்தும் வெளிப்படவில்லை
மேலும் நாம் இன்றுள்ள நிலையினையே இது பிரதிபலிக்கிறது"
என தமது கருத்தின் மூலம் அவரும் ஆதரவு தெரிவித்தார்.

ஆனால் இந்த சாட்சிகள் நீதி மன்றத்தில் எடுபடவில்லை.

ஆசிரியரும் ,கட்டுரை எழுதிய மாணவரும் குற்றவாளிகளாக கருதப்பட்டு நீதிமன்றம் இருவருக்கும் தலா 100  ரூபாய் அபராதம் விதித்தது.

இதனை கட்ட தவறினால் ஒரு மாத சிறை தண்டனை என்றும் நீதிபதி தீர்ப்பு கூறினார்.

நாளிதழின் ஆசிரியர் தாம் சார்ந்த கட்சியின் கொள்கைபடி அபராதம் கட்டாமல் சிறைவாசம் சென்றார்.

மாணவரோ அபராதம் கட்டினார்.

இவர் முனைவர் பட்டத்திற்காக பிறன் மலை கள்ளர்என்ற தலைப்பில் ஆய்வு செய்ததை அடிப்படையாக கொண்டே இயக்குனர்களில் இமயம் என்று போற்ற படுபவர்,
அண்ணன் தங்கை பாசத்தை பெரிதும் வெளிப்படுத்தும் படம் ஒன்றை எடுத்தார் 1993 ல்.

மறவாமல் இவருக்கு திரையில் நன்றி கூறியிருந்தார் இயக்குனர் என்பது பெட்டிச் செய்தி.

இரு பெரும் தமிழறிஞர்கள் நீதிமன்ற படியேறி தமக்கு ஆதரவாக சாட்சி சொன்னதை பற்றி அந்த மாணவர் என்றும் பெருமிதம் கொண்டிருந்ததில்லை.

தன்னடக்கமே காரணம்.

ஆயினும் இவர் என்தந்தையின் மிக நெருங்கிய நண்பர் என்பதில் எனக்கு மிகவும் பெருமையே.

மாணவர் பெயர், தமிழகத்தின் பல கல்லூரிகளில் பேராசிரியராக பணியாற்றி சமீபத்தில் மறைந்த திரு.சி என் நடராஜன் அவர்கள்.



சாட்சி சொன்ன 

ஒருவர் - பாவேந்தர் திரு. பாரதிதாசன் அவர்கள் 



மற்றொருவர் - தமிழறிஞர் திரு. மூ. வ அவர்கள்


இப்படி தமிழுக்காக போராடிய பெரிய மனிதர்களை மறந்து ,

தனியார் பள்ளியில் தமிழ் பேசினால் அபராதம் கட்டியும் ,

பொது  இடங்களில் தமிழ் பேசினால் அவமானம் என்றும் வாழ்கின்றோம்.

மெல்ல தமிழ் இனி என்ன ஆகும்.

தெரிந்தவர்கள் விடை பகருங்களேன் ...................................

27 கருத்துகள்:

  1. தங்கள் தந்தையின் நெருங்கிய நண்பர் எனும் தகவல் மகிழ்ச்சி ஐயா...

    தமிழ் என்றும் வாழும்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வருகைக்கு நன்றி ஐயா .
      உங்களை போல நானும் அந்த நம்பிக்கையில் இருக்கிறேன்.

      நீக்கு
    2. சொல்வதற்கு இதுபோல் நல்ல பல செய்திகள் எல்லோரிடத்தும் உண்டு.ஆனால் சொல்பவர்கள் மிக குறைவே.அந்த குறைவானவர்களில் நிறைவானவர் நீங்கள்.முக்கியமான அரிய நிகழ்வை பதிந்ததற்கு பாராட்டுக்கள்.மேலும் தொடரட்டும் உங்கள் எழுத்து.

      நீக்கு
  2. அரிய வரலாற்று நிகழ்வை தந்தமைக்கு நன்றி நண்பரே...

    //கூலியாட்களாக நாம் நம்முடைய தாயகத்திலே அல்லல் படுகின்றோம் , ஆனால் பிழைப்பை நாடி வந்த கூட்டமோ இன்றைக்கு கும்மாளம் அடித்து கொண்டிருகிறது//

    இன்று கோவையில் முதலாளிகள் பலரும் அயல் மாநிலத்தவரே... இனி இதை தடுக்க இயலாது காரணம் தமிழன் சோம்பேறியாகி விட்டான் மற்றும் ஆக்கப்பட்டான்.

    கொரோனாவில்கூட அரசியல் விளையாட்டு நிகழ்ந்து கொண்டு இருக்கிறது.

    எல்லாம் பணந்தின்னி பேய்கள்.

    இலவசத்துக்கு மயங்கியதின் விளைவு இதற்கான தண்டனையை அனுபவிப்பது நாளைய சந்ததிகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வழக்கம் போல தங்களின் நீண்ட கருத்திற்கு நன்றி நண்பரே. தமிழகம் போல வேறு எங்கும் இந்த அளவு இலவச பொருட்கள் வழங்க படுவதில்லை இன்றே நினைக்கிறன்.
      நாளைய சந்ததிகள் நலமாய் இருக்க இறைவனை வேண்டுவோம்.

      நீக்கு
  3. very nicely written kumar. Good know about Mr C N Natarajan.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பர் சுந்தரின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றிகள் பல.

      நீக்கு
  4. இது போன்ற பதிவுகள் மாணவப்பருவத்திலேயே சமூகப்பார்வையை விரிவாக்கும். வாழ்த்துக்கள்.

    உடுவை.எஸ்.தில்லைநடராசா...இலங்கை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரின் வருகையும் கருத்தும் நிச்சயம் எனக்கு ஊட்டச்சத்தாக அமையும்.
      நன்றி.

      நீக்கு
  5. அறிவுக்கொடி நடராசன், திருநெல்வேலி, அன்பு குமார் மிக்க நன்றி.. அருமையாக பதிவு செய்து இருக்கிறாய். உன்னை நினைத்துப் பெருமையாக இருக்கிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அத்தை அவர்களின் வருகைக்கு நன்றி.
      உங்களை தவிர CNN மாமாவை பற்றி வேறு யாருக்கு நன்றாக தெரியும்.

      நீக்கு
  6. பதில்கள்
    1. நண்பர் வெங்கட் நாகராஜ் அவர்களின் கருத்திற்கு நன்றி.

      நீக்கு
  7. அன்பு குமாருக்கு, சிறப்பான ஒரு செய்தியை அழகான முறையில் பதிவிட்டமைக்கு வாழ்த்துகள். நம் மக்களட ஒரு சிலரிடம் உள்ள சோம்பல் தன்மையே வேலையின்மை என்ற போலி கருத்தாக்கத்திற்கு ஒரு முக்கிய காரணம் என்று நினைக்கிறேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் என்று தோன்றுகிறது தலைமை ஆசிரியரே. கருத்திற்கு நன்றி.

      நீக்கு
  8. இருபெரும் பேரறிஞர்கள் நீதிமன்றப் படியேறியது பெருமிதம் கொள்ளச் செய்கிறது நண்பரே
    பேராசிரியர் நடராசன் போற்றுதலுக்கு உரியவர்
    அண்மையில் அவர் மறைந்த செய்தி அறிந்து வருந்துகிறேன்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பெருமிதம் தான் நண்பரே.
      ஓர் அருமையான மனிதரை இழந்து விட்டோம்.

      நீக்கு
  9. நல்ல பதிவு
    புதிய தகவல்
    வாழ்த்துகள் குமார்

    பதிலளிநீக்கு
  10. தந்தையின் நண்பர் என்பது உங்களை உண்மையாகவே பெருமைப்பட வைத்திருக்கும். எங்களுக்கும்கூட.

    பதிலளிநீக்கு
  11. // சொல்வதற்கு இதுபோல் நல்ல பல செய்திகள் எல்லோரிடத்தும் உண்டு.ஆனால் சொல்பவர்கள் மிக குறைவே.அந்த குறைவானவர்களில் நிறைவானவர் நீங்கள்.முக்கியமான அரிய நிகழ்வை பதிந்ததற்கு பாராட்டுக்கள்.மேலும் தொடரட்டும் உங்கள் எழுத்து // .

    நண்பர் ராஜேஷ் அவர்களின் வருகைக்கு மிக்க நன்றி. தங்களின் கருத்திற்கு நான் தகுதியானவனா என்று தெரியவில்லை. :)

    பதிலளிநீக்கு
  12. He is my periyappa.mrs arivukodi is my periyamma.my periyappa is a legend.he didn't go anywhere.he is with us.we love our periyappa always.i know Pichai periyappa very much.i am sujatha's daughter

    பதிலளிநீக்கு
  13. Our periyappa cn.natarajan is a great and good humanity legend.he is very good person.

    பதிலளிநீக்கு
  14. Excellent Nostalgia Kumar with very Sensible and Powerful msg....Congratulations
    Those were the days of Quality and Honest people and very very rare to find in nowadays
    Keep writing such a wonderful unsung heroes stories ...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நண்பரின் அவரின் வருகைக்கும் கருத்திற்கும் நன்றி. நீங்கள் சொல்லா விட்டால் இந்த பதிவினை இவ்வளவு விரைவில் எழுதியிருப்பேனா என்று தெரியவில்லை.

      நீக்கு