சனி, 21 டிசம்பர், 2019

எங்கேயோ கேட்ட குரல்


Are you from India by any chance …?
இன்றும் என் மனதில் பசுமையாய் இருக்கும் நிகழ்ச்சி நடந்தேறியது 2001ம் ஆண்டு ஜூன் மாதம்.
அமெரிக்காவின் நியுயார்க் நகரில் மாலை நேரத்தில் பேருந்திலிருந்து இறங்கி இல்லம் திரும்பிக் கொண்டிருந்தேன்.
கேள்வி கேட்ட அமெரிக்கனை நிமிர்ந்து பார்த்தேன் .
கோடை ஆதாலால் அரைகால் சராயும் , பனியனும் அணிந்திருந்தான் .
போதையில் தள்ளாடிக் கொண்டிருந்தவனை யாரும் சட்டை செய்ததாய் தெரியவில்லை.
மீண்டும் அதே வினாவை தொடுத்தான் என் மீது.
பொதுவாய் அமெரிக்கர்கள் நம் மீது மரியாதை கொண்டவர்கள் தான்.
மேலும் பொது இடங்களில் கண்ணியமாய் பழகுபவர்கள் தான்.
ஆனால் இவன் பார்வை என் மீது வெறுப்பை உமிழ்ந்து கொண்டிருந்தது.
இதற்கு முன்பு இவனை பார்த்த ஞாபகம் இல்லை . 
ஊரும் தெரியாது பெயரும் தெரியாது.
பின் ஏன் இப்படி  என்னை முறைக்கிறான் , என்னுள் கேள்வி எழாமல் இல்லை.
விடை சொல்லவில்லை என்றால் அவன் எதிர்வினை என்னவாயிருக்குமோ என்ற அச்சத்தில் தயங்கியபடியே ஆம் என்றேன்.
இன்னும் நெருங்கி வந்தான்.
உங்கள் ஊரில் சாதி எனும் கொடுமையால் மனிதர்களை பிரிக்கிறீர்களாமே.
முதல், இரண்டாம் மற்றும் மூன்றாம் தரம் என்று பிரிவுகள் இருப்பதாய் கேள்விப்பட்டேனே.
அதற்கு அரசு சான்றிதழ் உண்டாமே.
நீ எந்த பிரிவை சேர்ந்தவன்.
கேள்விகள் கணைகளாக வரவில்லை, தணலாகவே வந்தன.
சிறு வயதிரிலிருந்து வேறுபாடின்றி அனைவரிடமும் பழகுபவன் நான்.
இன்று வரை நீ எந்த இனம் என்று ஒருவரையும் கேட்டதில்லை என்று நான் மார் தட்டி கொள்ளலாம் என்று நான் நினைக்கும் போதே ,
அட முட்டாளே அது உன் அடிப்படை கடமையடா என்று மேலெழும் தற்பெருமையை மனசாட்சி அடக்கி வைக்கிறது.
அதே சமயம் எனக்கு மிகவும் வேண்டிய ஒருவர் என்னிடம் சாதி சங்கத்திற்கு நன்கொடை கேட்ட பொது , பல ஆண்டுகளுக்கு முன்பே தர மறுத்தவன் என்று பெருமை பட்டு கொள்கிறேன் .
நினைவுகள் இவ்வாறு ஓடிகொண்டிருக்கும் போதே ,கேள்வி கேட்ட அமெரிக்கருக்கு என்ன பதில் சொல்வது என்று தெரியவில்லை.
வழக்கம் போல் திரு திரு வென விழித்தேன்.
What the F***
மனிதன் எல்லாரும் ஒன்று தானே .உனக்கு இருக்கும் உதிரம் தானே அவனுக்கும்
பிரிவு உண்டாக்கி என்ன பெரிசா சாதித்து விட்டீர்கள்.
தடித்த சொற்கள் வர தொடங்கின
இது தர்மம் சங்கடமான நிலையாக தோன்றவில்லை.
மாறாக மிகவும் இழிவான நிலையாக இருந்தது.
கூனி குறுகி நின்றேன்.
அது பலர் நடமாடும் சாலையாயினும் யாரும் எங்களை சட்டை செய்யவில்லை.
மெல்ல துப்பாக்கி கலாச்சாரம் வேறு என் எண்ணத்தில் மேலோங்க துவங்கியது.
அவரையே நோக்கிய படி பேந்த பேந்த விழித்து கொண்டிருந்தேன்.
என்னிடமிருந்து மறுமொழி ஏதும் வராது என்று சற்று நேரத்தில் அவருக்கு தோன்றியது போலும்.
என்னை முறைத்தபடியே அவ்விடத்தை விட்டு அகன்றார்.
அடுத்த எகிற துவங்கிய எனது இதய துடிப்பு, சராசரி நிலைக்கு வரவே ஒரு வாரம் ஆனது.
என் அறிவுக்கு எட்டிய வரை ஜாதி என்பது தொழிலின் அடிப்படையில் ஏற்பட்டது என்றாலும், இன்று அதன் எதிர்மறை தாக்கம் ஏராளம் என்றும் ,
என்றும் அதனை நியாயபடுத்த முடியாது என்ற கருத்திலும் ஒத்து போகிறேன்.
ஜாதியை ஒழிக்க வேண்டுமென பல சங்கங்களின் முழக்கம் வெறும் ஏட்டளவில் இருக்கையில், தொலைவில் இருந்து கொண்டு மனித இனத்திற்காக குரல் கொடுத்த அந்த அருமை அமெரிக்கர் இன்றும் என் மனதில் உயர்ந்து நிற்கின்றார்.

15 கருத்துகள்:

  1. அன்புமிக்க குமார்
    தங்கள் கட்டுரையைப் படித்தேன். முக்கியமான வித்யாசம். ஜாதி என்பது வேறு வர்ணம் என்பது வேறு. தொழிற்குழுக்களால் வந்த அமைப்பு வர்ணம். ஜாதி என்பது உட்பிரிவுகள். 1000 சுள்ளிக்கட்டைகளை ஒரே கட்டாகக்கட்டினால் அதிலிருந்து, கட்டை அவிழ்க்காமலே சுள்ளிகளை உருவமுடியும். ஆனால், 10-10 சுள்ளிகளாகக்கட்டி அதனை ஒரு பெரியக்காடாகக்கட்டினால் சுள்ளிகளை உருவுவது கடினம். நாம் நமது அரசியல்வாதிகளின் பேச்சினைக்கேட்டு ஜாதிக்கும் வர்ணத்துக்கும் வித்யாசம் தெரியாமல் குழம்பியுள்ளோம். ஜாதி என்பதோ வர்ணம் என்பதோ ஒரு சமூகக்கட்டுப்பாட்டிற்காக உருவான ஒன்று. அதனை குழப்பி உயர்வு தாழ்வு கற்பித்து நமது முதுகெலும்பைஉடைத்தவன் வெள்ளையன். அதனைப் பின்பற்றி நாமும் ஜாடி வெறியர்களாக மாறிவிட்டோம். அரசாங்கமும் ஜாதி சான்றிதழ் கொடுத்து நம்மை மேலும் பிளவு படித்துகிறது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அன்பு மிக்க சுந்தருக்கு மிக்க நன்றி.நீண்ட மறுமொழிக்கும் "வர்ணம்" என்ற சொல்லை புரிய வைத்தமைக்கும்.

      நீக்கு
  2. வணக்கம் தண்பரே...
    ஜாதியை ஒழிப்பது என்பது குழந்தைகள் மனதில் தோற்றுவிக்க வேண்டும்.

    அது இயலாத காரியம் பள்ளியில் சேர்க்கும் பொழுதே குலம், கோத்திரம் குறிக்கப்படுகிறது.

    பிறகு "ஜாதிகள் இல்லையடி பாப்பா" என்ற முரண்பட்ட தத்துவம் போதிக்கப்படுகிறது.

    முதலில் இவைகள் கலையப்படல் வேண்டும் இதை செய்வது யார் ?
    அரசு ஆனால் இதை செய்யும் எண்ணங்களும் இல்லை, அதற்கான நேரங்களும் இல்லை.

    காரணம் அவர்கள் ஒவ்வொருவரும் இரண்டாயிரம் கோடிகள் சம்பாரிக்க வேண்டும்.

    நமக்கு அடுத்து தேர்தல் எப்போது வரும் ? என்ற ஆவல் காரணம் ஓட்டுக்கு ஐநூறு ரூபாய் கிடைக்கும்.

    நாம் இன்னும் அவதிப்பட வேண்டியது இருக்கிறது நண்பரே...

    அந்த அமெரிக்கர் உண்மையைத்தானே கேட்டார் ???

    பதிலளிநீக்கு
  3. வணக்கம் நண்பரே.பொட்டில் அறைந்தாற்போல இருக்கிறது தங்கள் பதில்.
    இந்த புண்ணிய பூமியில் இப்போது பாவப்பட்ட மனிதர்களே அதிகரிக்கிறார்கள். அந்த அமெரிக்கர் கேட்டது உண்மை மட்டுமில்லை தவறும் இல்லை.ஆகையினாலே என் மனதில் இன்றும் இருக்கிறார்.

    பதிலளிநீக்கு
  4. // உனக்கு இருக்கும் உதிரம் தானே அவனுக்கும் //

    உணர வேண்டியவர்கள் பல பேர்கள்...

    பதிலளிநீக்கு
  5. இந்தியாைவையும் சாதிகளையும் பிரிக்க முடியாது

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அரசாங்கம் முயற்சி எடுத்தால் நல்லது நடக்கும் என்று நம்புவோம் நண்பரே

      நீக்கு
  6. ஹாஹாஹாஹா
    கொஞ்சம் தற்பெருமை கலந்திருந்தாலும் சுவாரஸ்யம்

    பதிலளிநீக்கு