சனி, 12 அக்டோபர், 2019

உங்களுக்கு 12 எனக்கு 13


ஓர் ஆண்டிற்கு எத்தனை மாதங்கள்  ?

இந்த கேள்விக்கு 5 ம் வகுப்பு படிக்கும் சிறார்களே 12  மாதங்கள் என்று யோசிக்காமல் விடை சொல்வார்கள்.

ஆனால் இங்கு ஒரு நாடே மிக ஆச்சரியமாய் 13 மாதங்கள் என்று சொல்வது மட்டுமல்ல நடைமுறை படுத்தியும் வருகிறது.

ஆச்சரியமாக இருக்கிறதல்லவா. வாருங்கள் பார்ப்போம்.

மெஸ்கிரிம் என்று துவங்கும் முதல் ( நமக்கு செப்டம்பரில்) மாதத்திலிருந்து  அடுத்த 11 மாதங்களும் 30 நாட்களை கொண்டுள்ளன.

பகுமியினி எனப்படும் 13ம் மாதம் மட்டும் 5 நாட்களை உள்ளடக்கியது.

லீப் ஆண்டுகளில் இது 6 நாட்கள்.

இதன் காரணம் தெரியுமா நண்பர்களே.

உலகமே க்ரெகரி (Gregory) நாட்காட்டியை பின்பற்றும் பொழுது,

இத்தேசம் அப்படியேதும் உத்தேசம் இல்லாமல்,

காப்டிக் எனப்படும் நாட்காட்டியை பின் பற்றுவது தான்.

காப்டிக் நாட்காட்டி என்பது பண்டைய எகிப்திய நாட்டில் வழக்கிலிருந்த ஒன்று தான் 13 மாதங்களுடன்.

உலகிற்கே டிசம்பரில் தான் கிறிஸ்துமஸ் என்றால் இவர்களுக்கு ஜனவரியில்.

க்ரெகரி நாட்காட்டியிலிருந்து சுமார் 7 ஆண்டுகள் பின்தங்கியுள்ளதால் உலகமே கொண்டாடிய மில்லினியம் எனப்படும் 2000மாவது ஆண்டு இவர்களுக்கு செப் 2007ல்.

இப்படி இவர்கள் தமக்கென நாட்காட்டியை கொண்டிருந்தாலும் , ஆங்கில நாட்காட்டியையும் சேர்த்தே பல இடங்களில் பின்பற்றுவதால் வெளிநாட்டு பயணிகளுக்கு பெரிதும் சிரமம் இருப்பதில்லை.

அது எல்லாம் சரி - இது என்ன தேசம்.



ஆப்பிரிக்கா கண்டத்தில் இருக்கும் மொத்த மலைகளில் 70% மலைகளை தன்னிடம் கொண்ட , குளம்பியின் தாயகமான எத்தியோப்பியா தான் அது.


இறுதியாக ஒரே ஒரு கேள்வி.

ஐந்தே நாட்கள் கொண்ட ஆண்டின் கடைசி மாதத்தில் ஊதியம் எப்படி கணக்கிடப்படுகிறது …..

5 நாட்களுக்கான அல்லது 30 நாட்களுக்கா ..?

தெரிந்தவர்கள் யாரேனும் சொல்லுங்களேன்.

10 கருத்துகள்:

  1. அரிய தகவலாக இருக்கிறது நண்பரே.

    ஒரு ஐயம் வருகிறது நமது மோடிஜி இந்த நாட்டுக்கு போய் இருக்கிறாரா ?

    அந்த 5 நாட்கள் கொண்ட மாதத்திற்கும் அதே சம்பளம் இருப்பதுதான் சரியாகும் காரணம் அதுவும் மாதத்து கணக்கில்தானே வருகிறது.

    மேலும் 13-வது மாதத்தின் பெயர்தான் பகுமியினி"யா ? நமது பங்குனியின் முகச்சாயல் தெரிகிறதே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எப்போதும் போல் முதல் ஆளாய் கருத்திடும் நண்பருக்கு நன்றி.
      எனக்கு தெரிந்தவரை மோடி அவர்கள் இன்னும் செல்லவில்லை.
      பங்குனியை பற்றிய தங்கள் ஒப்பீடு சுவாரசியம் :) .
      வலை பூவில் அதிக நேரம் ஒதுக்கி தங்களின் ஒரு சில பதிவுகளுக்கு கருத்திட. இயலவில்லை.வருந்துகிறேன்

      நீக்கு
  2. சிறிது தடுமாற்றமாக இருக்கிறது....தகவலுக்கு நன்றி

    பதிலளிநீக்கு
  3. கேட்டிராத தகவல்..ஆச்சரியம்..பழமையை தக்கவைத்துக்கொள்வது ஒருவிதத்தில் நல்லது..

    பதிலளிநீக்கு