வெள்ளி, 15 ஜூன், 2018

மாற்று(ம்) திறனாளி


குழந்தை பிறந்தவுடன் வாரிசு வந்த மகிழ்வில் குடும்பமே திளைத்திருக்க வேண்டிய தருணம் அது.

பாட்டியார் மட்டும் பிறந்த குழந்தையை , இந்த பதிவின் நாயகரை ஏறெடுத்தும் பாராமல் மருத்துவமனையை விட்டு சென்று விட்டார்.

அப்படி என்ன நடந்து விட்டது.

வாருங்களேன் பார்ப்போம்.

1982 ம் ஆண்டு டிசம்பர் 4 ம் தேதி, ஆஸ்திரேலியாவில் நிக் வுஜிசிக் பிறந்த போது இவருக்கு இரு கரங்கள் மட்டுமல்ல, கால்களும் இல்லை.



ஓர் அங்குலம் அளவுள்ள கால்கள் கொண்ட இவருக்கு ஒரு கால் அந்த சிறிய அளவிலும் கூட கோணலாகவே இருந்தது.

மற்றபடி இவர் முழு உடல் நலன் உள்ளவர் தான்.

ஒரு மாற்றுத் திறனாளி சிறுவனைப் போல் இவர் இல்லை.

மாற்றுத் திறனாளிகளுக்கான பள்ளியில் பயிலாமல் இவர் மற்ற ஆரோக்கியமான மாணவர்கள் பயிலும் பள்ளியிலேயே சேர்ந்தார், அரும்பாடுபட்டு.

தம் மீது விழுந்த கேலியான விமர்சனங்களை தாங்க இயலாமல் 8ம் அகவையிலேயே தற்கொலைக்கு முயன்றவர் , பின்னர் அவைகளை மெல்ல மெல்ல வெற்றி படிகளாக்கிக் கொண்டார்.

இவரின் தாயார் மாற்று திறனாளிகளை பற்றி ஒரு நீண்ட நேரம் இவரிடம் பேசியதே இவரது வாழ்வின் திருப்பு முனையாக அமைந்தது

இரு கரங்களும், கால்களும் இல்லை , கூடவே கவலையும் இல்லை என்பதே இவரது தாரக மந்திரம்.



உயரம் .99 மீட்டர்களே உள்ள இவரது திறமைகளை பட்டியலிடுவது சிரமம் தான்.

தூரிகையை வாயால் கவ்விய படியே ஓவியம் வரைவதில் வல்லவர்.

ஓர் அங்குல கால்களை கொண்டே கால் பந்து அழகாய் விளையாடுவார்.



கணிப்பொறியில் நிமிடத்திற்கு 45 சொற்களை இவர் அடிக்கவும் செய்பவர் என்பது மட்டுமல்ல, இவர் இசை கருவிகளும் வாசிக்கும் திறன் உடையவர்..

தமக்கென தனியாக வடிவமைக்கப்பட்ட மகிழ்வுந்தை செலுத்துவதில் வல்லவர்.


Skydiving செய்வதிலும் அஞ்சாதவர்..



இவ்வளவு ஏன், இவர் நீந்தவும் செய்வார் என்றால் நம்ப முடிகிறதா.




முத்தாய்ப்பாக சொல்ல வேண்டுமென்றால் இவர் ஓர் ஊக்கமூட்டும் மேடை பேச்சாளர்.



2006 ல் அமெரிக்காவிற்கு குடி பெயர்ந்த இவர் 2012 ல் கனே மியாஹார என்ற பெண்மணியை கரம் பிடித்தார்.



மேடை பேச்சிற்காக இது வரை சுமார் 57 நாடுகள் பயணித்துள்ளார்.



3000 மேடைகள் ஏறியுள்ளார், ஒரு சில இடங்களில் பார்வையாளர்களின் எண்ணிக்கை 110,000 மேலே.

“Life without limits” , “Limitless” , “Unstoppable “, “Attitude is everything”  போன்ற ஆங்கில புத்தகங்களை எழுதியுள்ளார்.






"The Butterfly Circus என்ற குறும்படத்தில் நடித்தமைக்காக விருதும் பெற்றார்..


பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்து
ஆள்வினை இன்மை பழி.

(பொருள்: உடல் உறுப்பு, செயலற்று இருப்பது குறை ஆகாது. அறிய வேண்டியவதை அறிந்து முயற்சி செய்யாது இருப்பதே குறை)

மேற்கூறிய திருக்குறளுக்கு ஏற்ப சிறந்த உதாரணமாய் வாழ்ந்து வரும் இவரை போன்ற திறமைசாலிகள் இவ்வுலகிற்கு மென்மேலும் கிடைக்க பெறுவார்களானால், மாற்று திறனாளிகள் என்ற சொல் அகராதியிலிருந்து மறைந்து, உலகை மாற்றும் திறனாளிகள் என்ற சொல்லே நிச்சயம் இடம் பெறும்.

16 கருத்துகள்:

  1. முழுமை பெற்ற மனிதனாக பிறந்து பிரயோசனமற்ற குடிகார ஜடங்களாக வாழும் பலருக்கு மத்தியில் இவர் விந்தை மனிதர்தான்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக சரியாக பொட்டில் அறைந்தாற் போல் சொன்னீர்கள் நண்பரே.

      நீக்கு
  2. அதிசய அபூர்வ மனிதர். அவருடைய மன உறுதி பாராட்டத்தக்கது.

    பதிலளிநீக்கு
  3. Mikavum arumaiyaga uladhu..... valthukal vetriyai noki poga

    பதிலளிநீக்கு
  4. Mikavum arumaiyaga uladhu..... valthukal vetriyai noki poga

    பதிலளிநீக்கு
  5. அன்பு தம்பி குமார் அவர்களுக்கு, மனதில் கடும் உறுதி கொண்ட மனிதரைப் பற்றிய பதிவு அருமை. எழுத்து நடை ஈர்ப்பு கொண்டதாக சிறப்பாக உன்ளது. வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. மிக்க நன்றி த.ஆ அவர்களே. எழுத்தில் ஏதேனும் மாறுதல் இருந்தால் அதற்கு காரணம் நம் J.K தான்.

      நீக்கு
  6. அடுத்தவரானால் புகழ முடியும் ஆனால் நம்மில் ஒருவராக ஏற்றுக் கொள்ளக் கூடியவர்கள் எத்தனை பேர்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உண்மை தான் ஐய்யா. நிச்சயமாக அவரது மனைவிக்கு இவர் மீது காதலும் நிறைய இருக்க வேண்டும்

      நீக்கு
  7. நம்பிக்கைதான் வாழ்க்கை என்பதை நிரூபித்துக் காட்டிய மனிதர்
    இரண்டு கையும், இரண்டு காலும் இருந்தும், சோம்பித் திரியும் மனிதர்களுக்கு எல்லாம், ஒரு பாடமாய் விளங்குபவர்
    அருமையான பதிவு நண்பரே

    பதிலளிநீக்கு
  8. தங்கள் வருகைக்கும் பதிவிர்க்கும் நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  9. தங்கள் வருகைக்கும் பதிவிர்க்கும் நன்றி

    பதிலளிநீக்கு
  10. இவர் போன்றோரை அகிலம் போற்ற வேண்டும்.

    பதிலளிநீக்கு