புதன், 2 மே, 2018

இக்கரைக்கு அக்கரை பச்சை


நாம் எல்லாம் மிக சாதாரணமாக எண்ணி விடுவோம் காவல் துறை என்றால் அட்டூழியம் அராஜகம் கையூட்டு என்று.

ஆனால் அவர்களும் மனிதர்கள் தான். அவர்களுக்கும் மறு பக்கம் உண்டு.

ஒரு சில கருப்பு ஆடுகளை கொண்டு மற்றவரை தவறாக எண்ணி விட முடியாது.

24 மணி நேரம் போதவில்லை என்று அடுத்த நாளிலிருந்து கடன் வாங்கி செய்யும் மக்கள் பணி அது.

பிரதமாரோ மாநில முதல் அமைச்சரோ வரும் போது மணி கணக்கில் வெயிலோ மழையோ நின்றே ஆக வேண்டிய கட்டாயம் சாலையில்பல நேரங்களில் குடும்பங்களை மறந்தும் கூட.

பல சிரமங்களுக்கிடையிலும் (தமிழ்) நாட்டை காக்கும் காவல் துறையின் மீது எனக்கு எப்பொழுதுமே மதிப்பும், மரியாதையும் உண்டு என்பது மட்டுமல்ல, ஒரு சில உயர் (தர) அதிகாரிகளுடன் நெருங்கிய நட்பும் உண்டு.

அவர்களில் ஒருவரை இப்பதிவில் காண்போம் வாருங்கள்.

கிருஷ்ணமூர்த்தி  - இந்த பெயருக்கு எங்கள் கல்லூரி வட்டாரத்தில் ஒரு தனி இடம் உண்டு.


                                              நண்பர் கிட்டுவுடன்

இவர் என்னுடன் ஒன்றாய் கல்லூரியில் இயற்பியல் இளங்கலை பயின்றவர்.

உதகமண்டலத்தை சேர்ந்தவர் ஏன் தஞ்சை பூண்டி கல்லுரி வந்து படிக்க வேண்டும் என்ற வினாவிற்கு , இவர் இன்றும் விடை தேடித் கொண்டிருக்கிறார்.

நானும் அவரும் வெவ்வேறு நிறுவனங்களில் , பெங்களூரில் பணி புரிந்த கொண்டிருந்த போது தான் எங்களுக்குள் நெருக்கம் அதிகரித்தது, கல்லுரி நாட்களை விட.

தொலைபேசியில் மட்டுமே விடுத்த அழைப்பை நேரிடையான அழைப்பாய் ஏற்று , என் திருமணத்திற்கு வருகை புரிந்து சிறப்பித்த கண்ணியவானின் நட்பிற்கு நான் என்றும் நன்றி உடையவன் .

பெங்களூரில் பணி புரிந்த காலத்திலேயே காவல் துறை உதவி ஆய்வாளர் பதவிக்காக முயன்று அதில் வெற்றியும் பெற்றார் 1996ல்.

பயிற்சி காலத்தில் சிறந்த மாணவராக தங்க பதக்கம் பெற்ற உதவி ஆய்வாளர்களில் இவரும் ஒருவர்.



2004 ஆம் ஆண்டு அக்டோபரில் தமிழகத்தை, ஏன் இந்தியாவையே உலுக்கிய மிகவும் பரபரப்பான வழக்கில் ஈடுபட்டு தமது தனி திறமையை காட்டியமைக்காக மேலதிகாரிகளின் பெரும் மதிப்பை பெற்றார்.

இடையினிலே அவர் மத்திய அரசின்  (Narcotics Control Board) போதை பொருள் தடுப்பு பிரிவிலும் சில  காலம் பணி புரிந்தார்.

காவல் துறையிலேயே மிகவும் ஆபத்தான இப்பணிக்கு , தென்னிந்தியாவிலிருந்து அனுப்பப் பட்ட வெகு சிலரில், இவரும் ஒருவர் என்பது கூடுதல் சிறப்பு.

திரைப்படங்களில் வருவது போல் மாறு வேடங்கள் புனைந்து இவர் நிகழ்த்திய அருஞ்செயல்கள் ஒன்றோ இரண்டோ அல்ல.

2001 இல் கடலூர் மாவட்டத்தில் அழகி திரை படத்தின் திருட்டு VCD குற்றத்தினை பெருமளவு குறைத்தமைக்காக இயக்குனர் தங்கர் பச்சானின் பெரும் மதிப்பை பெற்று அவரின் நட்புக்கு பாத்திரமானார்.

இதன் மூலமாக திரைப் படத்தில் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தும் சட்டத்தை மதித்து அன்பாய் மறுத்தார் வந்த வாய்ப்பை.

10 வருடங்களுக்கு முன்பு சென்னை அம்பத்தூரில் நடந்த புகழ் பெற்ற வழக்கில் மிகப் பெரும் பங்கு வகித்து அரசிடம் இவர் பெற்ற பாராட்டு பத்திரம், இன்றும் வாசிக்கப் பட்டு கொண்டிருக்கிறது.



தனது பணியில் மட்டுமல்ல , கலை மீதும் மிகுந்த பற்று கொண்ட இவர்,   வருடங்களுக்கு முன்பு இவரது இரு மகள்களுக்கும் பரத நாட்டிய அரங்கேற்றம் செய்வித்தார்.

அப்போதைய இசை கல்லூரியின் துணை வேந்தராய் இருந்த திருமதி. வீணை காயத்ரி அவர்களும், இயக்குனர் தங்கர் பச்சானும் அவர்களும் தலைமை வகித்தார்கள்.

சகோதரிகளின் நடனம் மிக பிரமாதமாய் இருந்தது. அப்படி ஓர் ஒத்திசைவை பாராட்டாத ஆட்கள் இல்லை.

கடலூர் மாவட்டத்தில் துணை கண்காணிப்பாளராக பணியில் இருந்த இவரை, சில மாதங்களுக்கு முன் அரசு தாம்பரத்தை அடுத்த சேலையூரில் உதவி ஆணையாளராக பணி மாற்றம் செய்தது.


காவல் துறை ஆணையர் திரு. விசுவநாதன் அவர்களுடன் 

யாக்கையை பராபரிப்பதில் மிகுந்த அக்கறை கொண்ட இவர், சென்ற மாதம் கொரட்டூர் அருகே நடந்த ஆணழகன் போட்டிக்கு சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டிருந்தார்.

விருந்தினராய் சென்ற இவர் ,திடீர் மாப்பிள்ளை கதையாய் எதிர் பாராத போது மேடையேற்றப் பட்டு முதல் பரிசு வென்று வந்தது ஒரு தனி கதையே.

                                         ஆணழகன் போட்டியில்




இவர் தனது கடமையை மட்டும் நேர்மையான முறையில் செய்யவில்லை, பல ஏழை குழந்தைகள் கல்வி பயிலவும் உதவுகிறார் என்பதற்கு சஞ்சிகைகளிலும் மற்றும் முகநூலில் வெளி வரும் பதிவுகளே சாட்சி.





எப்பேர்ப்பட்ட மனிதர் என்றாலும் குறை வேண்டுமல்லவா .

பணியின் மீது உள்ள அதீத ஈடுபாட்டின் காரணமாக ஒரு நாளின் பெரும் பகுதியை கடமைக்காகவே செலவிடுகிறார்.

8 ல்  1 பகுதி நேரத்தை இவரால் குடும்பத்திற்காக செலவிட முடிகிறது. என்பதே அது.

இவரது பணி எப்போதும் போல நல்ல முறையில் தொடர , வாழ்த்த தகுதி இல்லை. ஆனால் இறைவனை வேண்டுகிறேன்

14 கருத்துகள்:

  1. தங்களது நண்பருக்கு எமது இராயல் சல்யூட்டை தெரிவித்து கொள்கிறேன் நண்பரே...

    வாழ்க அவர் தொண்டு.

    பதிலளிநீக்கு
  2. காவல்துறையில் கண்ணியமான அதிகாரிகளில் ஒருவர். வாழ்க வளமுடன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. குழம்பியும் , தேனீரும் கூட அருந்தாத அளவிற்கு ஒரு தீய பழக்கமும் இல்லாதவர்

      நீக்கு
  3. பல சாதனைகள் புரிந்து படித்த கல்லூரிக்கும்,நண்பர்களுக்கும் பெருமை தேடிதர வாழ்த்துகிறேன். திரைத்துறையை உதரியது பெரும் மனோபலம் வேண்டும்.

    பதிலளிநீக்கு
  4. Wow! He is one of the real super Hero in the Police department. Nice to share about him. Well done Kumar sir.

    பதிலளிநீக்கு
  5. போற்றுதலுக்கு உரிய மாமனிதர்
    போற்றுவோம் வாழ்த்துவோம்

    பதிலளிநீக்கு
  6. தகுதி வாய்ந்த காவல்துறை அலுவலரை அறிந்துகொண்டதில் மகிழ்ச்சி.

    பதிலளிநீக்கு
  7. அது உண்மை தான் ஐய்யா.தங்கள் வருகைக்கு மிக்க நன்றி

    பதிலளிநீக்கு