புதன், 18 ஏப்ரல், 2018

தலைமுறைகள் போற்றும் தலைமுறை


நம் பாரத நாட்டு விடுதலைக்கு பாடுபட்ட வீரர்கள் , அவரது சகோதரர் மற்றும் அவரது ஆண் வாரிசுகள் என அனைவரும் தூக்கு மேடைக்கு அழைத்து வர படுகிறார்கள்.

தேதியோ  அக்டோபர் 24 , ஆண்டு 1801

தங்கள் கைகளில் கட்டப் பட்டிருந்த இரும்பு சங்கிலியை துச்சமென மதித்து நிமிர்ந்த நடை போட்டு வருகின்றனர்.

எதிரே நிற்கும் மக்களின் கண்ணீரில் அந்த ஊரே மிதக்கிறது.

வெள்ளையனும் , சின்னையனும் மரண வாயிலில் நின்று கொண்டு இருக்கும்போதும் எதிரே இருந்த ஆங்கிலேயர்களை பார்த்து கூறுகிறார்கள்.

எம்மின மக்களுக்கு எங்களால் அளிக்கப்பட்ட நிலங்கள் , மானியங்கள் அனைத்தும் மதிக்கப்பட வேண்டும்”.

இவர்களது பரந்த விரிந்த மார்பை போன்றே தான் இவர்களது மனதும் என்பது இந்த வார்த்தைகளில் தெரிகிறது.

காலான் கண்ணெதிரே  இருக்கின்றான் என்று தெரிந்தும் கூட இவர்கள் எண்ணமெல்லாம் தங்களுடைய மக்களின் நலனை பற்றியே தான் இருந்தது.

தாங்கள் தம் மக்களுக்கு கொடுத்த நாடு, சுரண்ட வந்த ஆங்கிலேயனுக்கு ஒரு போதும் அடிமையாக கூடாது என்ற எண்ணம் இவர்களுக்கு.

மண்ணாசை கொண்ட ஆங்கிலேயர்கள் இவர்களது ஆண் வாரிசுகள் அனைவரையும் விட்டு வைக்க வில்லை, அந்த வாரிசின் அகவை 15 என்ற போதிலும்.

தப்பி பிழைத்தது பெண் வாரிசுகள் மட்டுமே.

எப்படியோ இவர்களது பார்வையிலிருந்து தப்பிய மூத்தவராது மகள் வழி பெயரன் தான் இந்த சகோதரர்கள் இருவரது உடல்களையும் பெற்று இறுதி சடங்குகளை செய்தார்.

அவரது பெயர் பெருமாள் சேர்வை.

இவர்களது  9ஆம் தலைமுறை சார்ந்த ஒருவருடன் தான் இப்போது நின்று கொண்டு இருக்கின்றேன்.

முன்னோர்களது வீரச் செயலை தியாகத்தை போற்றுவது மட்டுமல்ல அந்த மன்னர்களிடமிருந்து , இன்று வரை உள்ள தலைமுறையினரின் அனைத்து விவரங்களையும் பதிவேற்றியும் வருகிறார்கள்.


நம்ப தான் முடியவில்லை , ஆனாலும் நம்பித்தான் ஆக வேண்டும்.

இவர் எனது நீண்ட கால நண்பரின் மனைவி.

இவரது முன்னோர்கள் தான் நம் நாட்டு விடுதலைக்காக தம் உயிரை தியாகம் செய்தவர்கள் எனும் போது உள்ளம் சிலிர்த்தாலும், 15 வயது வாரிசுவின் உயிர் தியாகத்தை நினைக்கும்போது கண்களின் ஓரம் எட்டிப் பார்த்த கண்ணீரின் ஈரம் காய சிறிது நேரம் ஆகவே செய்தது.

இந்த வாரிசின் பெயர் அல்லி ராணி என்கிற சுபா அவர்கள்.


நண்பர் ராஜராஜனும் அவரது மனைவி திருமதி சுபாவும்

இவர் தற்போது சென்னை உயர் நீதி மன்றத்தில் வழக்கறிஞராக பணியாற்றுகிறார்.

இவரது கணவர் தான் ராஜராஜன் , எனது ஆருயிர் தோழன்.

இந்த சுபா அவர்களின் தாயார் திருமதி. பாப்பா நாச்சியாரும், தந்தையார் திரு. ராமகிருஷ்ணன் அவர்களும் தமக்கு அரசு மான்யம் எதுவம் வேண்டாம் எழுதி கொடுத்து விட்ட போதிலும் , சுபா அவர்களின் பெரியம்மா 
கருணா தேவி இன்றும் போராடிக் கொண்டிருக்கிறார்.

ஆனால் அது மானியத்திற்காக என்பது தான் வேறுபாடு.

அக்டோபர் 24ம் தேதி இந்த மன்னர்களின் உடல் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் இவரது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றாய் கூடி  இறை வழிபாடு செய்வது ஒவ்வோர் ஆண்டும் நடந்து கொண்டிருக்கிறது.



சகோதரர்கள் உயிர் தியாகம் செய்த இடம் 

நம் நலனுக்காக உயிர் தியாகம் செய்த மூதாதையர்கள் யார் தெரியுமா ,

மருது சகோதரர்கள்.

வியப்பென்றாலும் அது உண்மையே, இந்த சுபா அவர்கள் தான் பெரிய மருதுவின் வழித் தோன்றல்.




குடும்ப உறுப்பினர்களின் விவரங்கள்  - 10 தலைமுறைகளாய் 




8ம்  தலைமுறை சேர்ந்த சுபாவின் தாயார் அவரது கணவருடன்   



சுபாவின் சகோதரி திருமதி. கஸ்துரியும் அவரது கணவர் திருப்பதி ராஜாராமும் 


சுபாவின் சகோதரர் திரு சதீஷும் அவரது துணைவியாரும் 


10 ம் தலைமுறை (சுபாவின் ஆண் வாரிசு) மகன் மருது 


நாச்சியார் மீது மருது சகோதரர்கள் கொண்ட எஜமான விசுவாசம் , தற்போது சுபா அவர்களிடமும் தொடர்கிறது. 

10 ம் தலைமுறை சுபாவின் பெண் வாரிசின் பெயர் சோனா நாச்சியார்.




21 கருத்துகள்:

  1. அரிய தகவல்களை திரட்டித் தந்தமைக்கு எமது நன்றிகள் நண்பரே.

    பதிலளிநீக்கு
  2. நண்பர்கள் அனைவருக்கும் நம் நண்பர் அவரின் இல்லத்தரசியில் குடும்ப வீர வரலாறு தெரிய வாய்ப்பாக அமைந்தது கட்டுரை. family tree வரைப்படம் நன்கு காணும்படி இருந்தால் நலம். family tree இந்த மரபு நம் தமிழகத்தில் இல்லை. அரசர், மிராசுதாரர் போன்றவர்கள் குடும்பத்தில்தான் family tree இந்த வழக்கம் பின்பற்றப்படுகிறது. ஆனால், இந்தியாவில் குஜராத், சிந்தி வழி இனங்களில் சிறு குடும்பத்தினர் கூட family tree வைத்திருப்பார்கள். நம் தமிழகத்திலும் பின்பற்ற வேண்டும். நல்ல கட்டுரை.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு சிறிய இடைவெளிக்குப் பிறகு உன்னை சந்திப்பதில் மகிழ்ச்சி . நீ சொல்லும் செய்தி அருமையான ஒன்று தான். ஆனால் எத்தனை பேருக்கு தங்கள் தலைமுறை தெரியும்

      நீக்கு
  3. அன்பு சகோ குமார் அவர்களுக்கு, எனக்கு மிகவும் நெருங்கிய குடும்பத்தின் மருமகளின் தலைமுறை வரலாறு எனக்குத் தெரிய செய்தமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
  4. இன்றியமையாத வரலாற்றுத் தகவல்.

    பதிலளிநீக்கு
  5. ராஜவம்ச ராணியை
    மணந்த
    ராஜராஜனே
    மகுடம் தரிக்க
    வாழ்த்துகள்

    பதிலளிநீக்கு
  6. திருப்பத்தூரில் மருது சகோதரர்கள் தூக்கில் இடப்பட்ட இடம், காளையார் கோவிலின் எதிரில் உள்ள மருதுவின் நினைவிடம், முத்துவடுக நாதரின் நினைவிடம்,வெட்டுடைய காளியம்மன் கோயில், குயிலி மனித வெடிகுண்டாய் மாறிய இடம், ராஜராஜசுவரி கோயில், வேலுநாச்சியார் நினைவிடம், சிவகங்கை அரண்மணை என ஒரு நாள் முழுதும் மனம் நெகிழ்ந்து பார்த்த நினைவலைகள் மீண்டும் மனதில் தோன்றுகின்றன
    மருது பாண்டியரின் வாரிசுகள் இன்னமும் இருக்கிறார்கள் என்ற செய்தியே, மனதை சிலிர்க்க வைக்கிறது
    நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  7. உங்கள் வருகைக்கும் மற்றும் பதிவிற்கும் நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  8. Rare news and very interesting to known Marudhu brother's family. Thank you for your blogs.

    பதிலளிநீக்கு
  9. அருமையாான பதிவு. பெருமை படுகிறேன்்.அண்்ணனாாக

    பதிலளிநீக்கு
  10. அருமையாான பதிவு. பெருமை படுகிறேன்்.அண்்ணனாாக

    பதிலளிநீக்கு
  11. ௮௫மையான பதிவு திரு. குமார் அண்ணா !! என் அண்ணி சுபா, ௭ன் அண்ணன் ராஜராஜன் ,மருது மற்றும் சோனா ௮வர்களின் குடும்பத்தினர்களுள் ஒருவரான நான் பெருமை அடைகிறேன் - இப்படிக்கு ௨ங்கள் தங்கை மருதரசி

    பதிலளிநீக்கு
  12. இணையதளம் பல்வேறு தீமைகளை தந்தாலும்..அதில் நன்மையும் இருக்கிறது என்பதற்கு மற்றுமொரு எடுத்துக்காட்டு இந்த வரலாற்று பதிவு..தோழருக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.தொடரட்டும் உங்கள் பணி...

    பதிலளிநீக்கு
  13. தங்கள் வருகைக்கும் மற்றும் பதிவிற்கும் மிக்க நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு